தன்னுடைய நடிப்பாலும் ,மறக்கமுடியா தனிப்பட்ட சிரிப்பாலும் நம்மோடு பயணித்த அண்ணன் குமரிமுத்து அவர்கள்
எம்மை விட்டு பிரிந்தமைக்காக மனம் வருந்திகிறோம். அவரை இழந்து வாடும் அவருடைய உட்றருக்கும் , சுற்றத்தார்க்கும் எங்கள் ஆறுதலை சமர்ப்பிகிறோம் ...
இந்நேரத்தில் அவர் சங்கத்திர்க்கு ஆற்றிய அரும்பணிகளையும் சங்க நலத்திற்காக குரல் கொடுத்து போராடியதையும் நியமன செயற்குழு உறுபினராக எங்களோடு செயல்ப்பட்டு முன்னேற்றத்திற்கான பல்வேறு யோசனைகளை வழங்கியதையும் நன்றியுடன் நினைவுகூர்கிறோம்
நிறைவுசெய்யமுடியா ஒருவெற்றிடத்தை விட்டு சென்றிருக்கும் அவர் சங்கத்திற்காக கண்ட கனவுகளை நனவாக்குவது ஒன்றே அவர் ஆத்துமாவுக்கு செலுத்துகின்ற மலர்வளையமாகும் . அவர் பிரிவால் வருந்தியும் , நினைவால் நெகிழ்ந்தும் வாடும் தென்னிந்திய நடிகர் சங்க நிருவாகிகள் , செயற்குழு உறுபினர்கள்,அங்கத்தினர்கள் .