பிரபல இயக்குனர் திரு. மணிரத்தினதோடு பணிபுரிவது திரைத்துறை சார்ந்த அனைவர்க்கும் ஒரு கனவாகும். அவரோடு பணிபுரிந்த ஒரு நிகழ்ச்சி அந்த கனவை நிஜமாக்கியது கலை இயக்குனர் அமரனுக்கு. பிரபல இயக்குனரும் வீணை வித்தவனுமாகிய காலம் சென்ற திரு. வீணை பாலச்சந்தர் அவர்களுக்கு எடுக்கப்பட்ட விழாவிற்கு பின்புலம் அமைக்க கலை இயக்குனர் அமரனுக்கு வாய்ப்பு வந்தது. அந்த விழாவை தலைமை ஏற்று நடத்திய திரு. மணிரத்தினத்திற்கு அமரனின் வேலை பிடித்து போக, அவர் இயக்கி கொண்டிருக்கும் " காற்று வெளியிடை.." படத்திற்கு ஊட்டியில் எடுக்கப்பட்ட பகுதியில் கலை இயக்குனராக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது ஊட்டியில் அந்த பணி முடிந்து விட்ட நிலையில் நிஜமாகவே கலை இயக்குனர் அமரனுக்கு கனவு நிஜமானது.
கனவு நிஜமானது கலை இயக்குனர் அமரன்
0
1767
Previous article
Next article