5.3 C
New York
Monday, March 24, 2025

Buy now

spot_img

‏@andrea_jeremiah as a wild life photographer in #KAA – The Forest.

                            வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில்    ஆண்ட்ரியா நடிக்கும் “ கா “   

                                  ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் இருவரும் இணைந்து தற்போது  “பொட்டு “ படத்தை மூன்று மொழிகளில் தயாரித்து வருகிறார்கள் பொட்டு படம் மே மாதம் வெளியாக உள்ளது.

அதை தொடர்ந்து ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “ கா “ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். உலக மக்களுக்கான படம் இது.

இந்த படத்தில் ஆண்ட்ரியா கதாநாயகியாக நடிக்கிறார். முழுக்க முழுக்க கதாநாயகியை முன்னிலைப் படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளது.

கா என்றால் இலக்கியத் தமிழில் காடு, கானகம் என்று பொருள்படும். முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி கதை உருவாக்கப் பட்டுள்ளதால் “ கா “ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிகளுக்கு சென்று அவற்றின் வாழ்க்கை முறைகளையும் மற்றும் குணாதிசயங்களையும் பதிவு செய்யும் வைல்ட் லைப் போடோகிராபர் கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் இளவரசு மற்றும்  நீண்ட இடைவெளிக்கு பிறகு சலீம் கவுஸ்  நடிக்கிறார். மற்ற நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 ஒளிப்பதிவு           -        அறிவழகன்

இசை           -        அம்ரிஷ்

 

 

தயாரிப்பு          -       ஜான்மேக்ஸ், ஜோன்ஸ்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் -  நாஞ்சில்

 முழுக்க முழுக்க காட்டை மையப்படுத்தி  திரைக்கதை அமைக்கப் பட்டுள்ளது. கிரைம் திரில்லர் படமாக உருவாக உள்ளது “  கா “

படப்பிடிப்பு விரைவில் துவங்கி அந்தமான், மூணார், மேற்கு தொடர்ச்சி மலைகள் போன்ற இடங்களில் நடைபெற உள்ளது. 

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE