22.2 C
New York
Tuesday, October 8, 2024

Buy now

spot_img

விழாக்காலத்தை ஜொலிக்க வைக்கும் பட்டுப் புடவைகள் ஸ்ரீபாலம் சில்க்-சின் புத்தம் புதிய 3 ரகங்கள்

தமிழ்நாடு பூத்துக் குலுங்கும் காலம் பண்டிகை காலம். அந்த பண்டிகைகளுக்கு மேலும் சிறப்பூட்டுவது ஆடை, அணிகலன்கள். குறிப்பாக பட்டுப் புடவை அணிந்து நடந்தாலே அந்த நாள் திருவிழா தான். இன்றைய கால இளம்பெண்களும் விரும்பி அணியும் பட்டுப்புடவைகள் என்றாலே நினைவுக்கு வருவது ஸ்ரீபாலம் சில்க் தான்.

ஒவ்வொரு விழாக்காலத்தின் போதும் புத்தம் புதிய டிசைன்களில் பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தி வரும் ஸ்ரீபாலம் சில்க்ஸ், எதிர்வரும் விழாக்காலத்திற்காக மீண்டும் மூன்று புதிய ரகங்களோடு சந்தைக்கு வந்துள்ளது.

சென்னையில் வண்ணமிகு விழாவுக்கு நடுவே நடைபெற்ற அறிமுக விழாவில், ஸ்ரீபாலம் சில்க்-சின் புதிய ரக புடவைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஹை ரைஸ், டபுள் டிலைட் மற்றும் ப்ளென்ட் இன் ட்ரெண்ட் - 2 என்ற மூன்று ரகங்கள் பட்டு உலகில் தடம் பதிக்க வந்துள்ளன. இந்த புடவைகளை அணிந்தபடி அணிவகுத்து வந்த மங்கைகள், பட்டில் பதித்த வைரமாய் ஜொலித்தனர். எதிர்வரும் தீப ஒளி திருநாளை மேலும் ஒளிமயமாக்க இந்த பட்டுப் புடவைகளை விட மாற்று ஏது?

இந்த விழாவில் பேசிய ஸ்ரீபாலம் சில்க்-சின் திருமதி.ஜெயஸ்ரீ ரவி அவர்கள், ஒவ்வொரு ஆண்டு தீபாவளி உள்ளிட்ட திருவிழா காலத்தையொட்டி புதியரக பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தி வருவதை சுட்டிக்காட்டினார். எங்கள் ரகங்களுக்கு சவால் விடும் விதமாக நாங்களே புதிய புதிய ரக பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தி வருவது எங்களுக்கு நாங்களே விட்டுக் கொள்ளும் சவால் என்றார்.

ஹை ரைஸ் பட்டுப் புடவையின் அர்த்தம் அதன் பெயரிலேயே உள்ளது. ரோஜாப் பூ போன்ற இளம்பெண்களின் உயரத்தை உயர்த்திக் காட்டும் விதமாக இந்த புடவையின் பார்டர் அமைந்துள்ளது. இந்த புடவையை அணியும் சராசரி உயரம் கொண்ட பெண்கள், சற்றே உயரமானது போன்ற தோற்றம் ஏற்படுவது உண்மை.

டபுள் டிலைட் புடவைகள்.. ஆம், உங்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்த வந்துள்ளது இந்த பட்டுப் புடவைகள். இதில் வழக்கமான பார்டர் கீழ் புறத்தில் இருக்கும். வண்ணமிகு புத்தம் புதிய பார்டர் அதன் மேல்பகுதியில் இருக்கும். பார்டர்களை ரசிக்கும் இளம்பெண்களின் மறுக்க முடியாத தேர்வு இந்த டபுள் டிலைட் பட்டுப் புடவைகள்.

கடந்த ஆண்டு பட்டுப் புடவை உலகில் புரட்சியை ஏற்படுத்திய ப்ளென்ட் இன் ட்ரெண்ட் புடவைகளின் மேம்பட்ட தரம் தான் தற்போதைய பளென்ட் இன் ட்ரெண்ட். பருத்தி, சணல் போன்ற நூல்களை கொண்டு இந்த புடவைகள் உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், ஸ்ரீபாலம் சில்க்-சின் க்ரியேட்டிவ் பிரிவு தலைவரான சுனிதா அவர்களின் வண்ணமிகு ஓவியங்கள் இதில் இடம்பெற்று இருக்கும் என்பதுதான்.

இந்த புதிய ரக பட்டுப் புடவைகள் அனைத்தும் ஸ்ரீபாலம் சில்க்-சின் அனைத்து கிளைகளிலும் கிடைக்கும். இதுமட்டுமல்லாது www.palamsilk.com என்ற இணையதளத்திலும், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் செல்போன்களில் ஆப் டவுன்லோடு செய்தும் பார்க்கலாம்..

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE