கலைப்புலி தாணு தயாரிப்பில் அதர்வா நடிப்பில் உருவான கணிதன் படத்தில் பிரபல மாடல் தருண் அரோரா வில்லனாக அறிமுகம் ஆகியிருக்கிறார்.
மிக யதார்த்த நடிப்பில் தமிழில் தனது பயணத்தை தொடங்கி உள்ள தருண் அரோராவுக்கு வில்லத்தனத்தில் வித்தியாசம் காட்ட வேண்டும் என்று ஆசை.
பிரபலமான ரேமண்ட், குவாலிட்டி வால்ஸ், எல்.ஜி., மெக்டனல் விஸ்கி உட்பட பல முன்னணி நிறுவன மாடலாக இருந்தவர்.
தமிழ், தெலுங்கு படங்களில் விதவிதமாக வில்லத்தனம் செய்யும் படங்களை எதிர்பார்க்கிறார்.