16.6 C
New York
Monday, September 16, 2024

Buy now

spot_img

விஜய் வசந்த் நடிக்கும் “சிகண்டி”

என்னமோ நடக்குது பட இயக்குனரின் புதிய படம்

“ சிகண்டி “

சமீபத்தில் வெளியாகி அமோக வெற்றி பெற்ற “ என்னமோ நடக்குது” படத்தை தொடர்ந்து அப்படத்தின் இயக்குனர் பி.ராஜபாண்டி அடுத்து இயக்கும் படத்திற்கு “சிகண்டி” என வித்தியாசமான தலைப்பை வைத்திருக்கிறார்.

“என்னமோ நடக்குது” படத்தை தயாரித்த டிரிபிள் வி ரெக்கார்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் வி.வினோத்குமார் “ சிகண்டி” படத்தையும் தயாரிக்கிறார்.

இரண்டு நாயகர்கள் நடிக்கும் இப்படத்தில் “என்னமோ நடக்குது” படத்தின் நாயகன் விஜய் வசந்த் முன்னணி நாயகர் ஒருவருடன் இணைந்து நடிக்கவிருக்கிறார். இவர்களுடன் முன்னணி கதாநாயகிகள் மற்றும் நடிகர் – நடிகைகள் பலரும் நடிக்க எழுதி இயக்குகிறார் பி.ராஜபாண்டி.

படத்தை பற்றி இயக்குனரிடம் கேட்டோம்...

“என்னமோ நடக்குது” படத்தை போலவே இதுவும் விறுவிறுப்பான திரைக்கதை கொண்ட அக்ஷன் படம்.நவீன தொழில்நுட்பத்துடன் சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்க “ சிகண்டி” தயாராகிறது.

சமூக நோக்குடன் அமைக்கப்பட்ட இக்கதையில் இன்றைய காலகட்டத்தில் தெரிந்தே நான் அனுமதித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூக குற்றத்தை தோலுரித்துக்காட்டும் படமே “ சிகண்டி” என்றார் இயக்குனர் பி.ராஜபாண்டி.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE