தற்போது விஜய் சேதுபதி நானும் ரௌடிதான் வெற்றி படத்தை தொடர்ந்து இவருக்கு இரண்டு படங்கள் வெளிவர தயாராகிக்கொண்டிருக்கிற நிலையில் தற்போது அடுத்த படத்தில் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த படத்திற்கு ’றெக்க’ என்று தலைப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படபிடிப்பு தற்போது நடித்துகொண்டிருக்கும் தர்மதுரை, ஆண்டவன் கட்டளை படங்களை தொடர்ந்து இப்படத்தின் படபிடிப்பு துவங்க இருக்கிறது
இந்த படத்தை ஆரஞ்சு மிட்டாய் படத்தை தயாரித்த காம்மன் மேன் பி.கணேஷ் தயாரிக்கும் இப்படத்தை வா டீல் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்தினசிவா இயக்குகிறார்.
இந்த படத்தில் விஜய் சேதுபதுக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடிக்கிறார், மற்றும் D.இம்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் மேலும் M.C கனேஷ் சந்திரா இப்படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவர்.
படதொகுப்பு பிரவின் K.L , கலை மோகனமகேந்திரன், சண்டை காட்சிகளை ராஜசேகர் கவனிக்க மிக பிரம்மாண்டமாக உருவாகிறது. இப்படம் விஜய்சேதுபதி படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு காதல் கலந்த மாஸ் எண்டர்டைனர் ஆக உருவாக வருகிறது.