16.2 C
New York
Friday, October 11, 2024

Buy now

spot_img

லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு 11ஆம் ஆண்டு இசை திருவிழா

வருடா வருடம் கோலகலமாக தொடங்கி அனைத்து கார்நாடக இசை ரசிகர்களை கவர்ந்த லஷ்மன் ஸ்ருதியின் சென்னையில் திருவையாறு தனது 11ஆம் ஆண்டு சென்னையில் திருவையாறு இசை திருவிழாவை இந்த மாதம் 18ம் தேதி தொடங்கவுள்ளது. இவ்விழாவை பிரபல நடிகர், நடன இயக்குனர் மற்றும் இயக்குனர் திரு. பிரபுதேவா அவர்கள் தொடங்கி வைக்கிறார்.

இவ்வாண்டு நடக்கவுள்ள இந்த இசை திருவிழாவின் சிறப்பம்சங்களை பற்றி விவரிக்க இன்று (14 டிசம்பர்) பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பல அம்சங்கள் பற்றி விவரித்த இந்த சந்திப்பில் கர்நாடக இசை ஜாம்பவாங்கள் கலந்து கொண்டனர்.

சமீபத்தில் சென்னையில் பெய்த கனமழையாலும் வெள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நிவாரண தொகைகளை கர்நாடக இசை கலைஞர்கள் அறிவித்தனர்.

நடன கலைஞர் மற்றும் பிரபல நடிகை ஷோபனா 1 லட்சமும், கர்நாடக இசை கலைஞர் கே என் சசிகிரன் 1 லட்சமும், கர்நாட்டிகா சங்கம் சார்பாக 1 லட்சமும், மற்ற கர்நாடக இசை கலைஞர்கள் அனைவரும் சேர்ந்து 3 லட்சமும் வழங்கினர்.

மேலும் சென்னையில் திருவையாறு இசை விழாவின் மற்றுமொரு சிறப்பாக கருதப்படும் உணவுத்திருவிழாவில் உலக அதிசங்களில் ஒன்றாக கருதப்படும் ஈபில் டவரை ஒற்றாற் போல் 30 அடி உயரமான முருங்கைகாய் கோபுரத்தை பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் பாக்யராஜ் துவங்கி வைக்கிறார்.
இந்த நிவாரண தொகை ரோட்டரி இண்டர்நேஷனல் டிஸ்டிர்க்ட் – 3230 மூலம் வழங்கப்படும் என்று கூறினர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE