சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், ராஜ்கிரண், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிக்க பொன் ராம் இயக்கி இருக்கும் படம் ‘ரஜினிமுருகன்’.
இமான் இசையமைத்து இருக்கும் இப்படத்துக்கு பாலசுப்பிரமணியெம் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தை வேந்தர் மூவிஸ் நிறுவனம் வெளியிட இருக்கிறது.
திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் இப்படத்தை வெளியிடும் முயற்சியில் பலமுறை இறங்கியது. ஆனால், அந்நிறுவனம் வாங்கிய கடனால் படத்தை வெளியிட முடியாமல் திணறியது.
இது தொடர்பான பேச்சுவார்த்தையில் திருப்பதி பிரதர்ஸ் இறங்கியது. தற்போது கடன் பிரச்சினைகள் முடிந்துவிட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், டிசம்பர் 4-ம் தேதி ரஜினிமுருகன் வெளியாகிறது என்று அப்படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான லிங்குசாமி ட்விட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இது மாதிரி பல முறை சொல்லி இருந்தாலும் பார்போம் இந்த வாட்டியாகவது வரும் என்ற நம்பிக்கை வைப்போம் அத்துடன் கடுமையான போட்டியில் வருகிறது ஆமாம் டிசெம்பர் மாதம் 4-ம் தேதி உறுமீன், ஈட்டி, போன்ற படங்களுடன் போட்டி போடபோகிறது. எல்லாம் முருகன் மேல இருக்குற நம்பிக்கை தான்.