9 வயது நிரம்பிய பேபி சாதன்யா தான் முதல் படமான பேபியில் தான் நடிப்பால் முத்திரை பதித்தார் மேலும் திரிஷா இல்லனா நயன்தாராவிலும் குழந்தை ஆனந்தியாக நடித்தார்.
தற்போது நிசப்தம் என்ற படத்தில் பூமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் அதேபோல் காத்தாடி படத்தில் அனிதா என்ற கதாபாத்திரத்திலும் வீரசிவாஜியில் யாழினியாக விக்ரம் பிரபுவின் அக்கா மகளாக நடிக்கிறார்.
4ம் வகுப்பு படிக்கும் சாதன்யாவிற்கு இயக்குனராகும் ஆசை அதிகமாம் அதன் முதல் அடியாக தற்போது ஒரு குறும்படத்திற்கு கதை எழுதி வருகிறார்.ஏப்ரல் விடுமுறையில் குறும்படம் இயக்கி முடிப்பேன் எனும் சாதன்யா தனக்கு மணிரத்தினம்,ஷங்கர்,முருகதாஸ் போன்றோர் இயக்கத்தில் நடிக்க ஆசை எனவும் அதேபோல் ரஜினி,கமல்,அஜித்,விஜய் போன்ற முன்னணி நடிகர்களோடும் நடிக்க ஆசை என தெரிவித்துள்ளார்