சென்னை ஏப்ரல் 23: உலக பூமி தினத்தை முன்னிட்டு ‘யாதும் ஊரே’ குழுவும் மற்றும் “CARE EARTH” தன்னார்வ அமைப்பும் இணைந்து, “சிங்கார சென்னையை கொண்டாடுவோம்” என்ற மையக் கருத்துடன், சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்தில் சென்னையின் சிறப்பினை எடுத்துரைக்கும் விதமாகவும், இயற்கை மற்றும் சுற்றுசூழல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடனும், சுவர் ஓவியங்களை வரையும் நிகழ்ச்சியினை நடத்தினார்கள்.
நிகழ்ச்சியின் துவக்கமாக நடிகரும் ஓவியருமான திரு. சிவகுமார் அவர்கள் ஓவியத்தை வரைந்து தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஓவிய திறன் பெற்ற 75 பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளும், 125 தன்னார்வலர்களும் உற்சாகத்துடன் பங்கேற்றனர். சுற்று சூழல் பாதுகாப்பு சார்ந்த புரிதலினை இளைய சமூகத்திடம் ஏற்படுத்தும் நோக்கத்துடன் மாணவர்கள் இந்த முயற்சியில் ஈடுபடுத்த பட்டனர். பெரும்பாலும் நடைமேடை எண்-1இல் வட இந்திய ரயில்கள் வந்து செல்வதானால் , அவர்களுக்கும் சென்னையின் சிறப்பினை எடுத்துரைக்கும் விதமாகவும், இயற்கைக்கும் மக்களுக்கும் உள்ள தொடர்பினை விவரிக்கும் விதமாகவும் ஓவியங்கள் வரையப்பட்டன.
இந்த நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக முனைவர்.காளீஸ்வரன் அவர்களின் ‘மாற்று ஊடக மையக் குழு’, பாரம்பரிய கலைகளின் மூலமாக சுற்று சூழல் பாதுகாப்பு குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நிகழ்ச்சி சிறப்பாக நடத்துவதற்கு தங்கள் முழு ஒத்துழைப்பை அளித்து ஊக்கபடுத்திய தென்னிந்திய ரயில்வே துறையினருக்கும் பங்கேற்ற அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துகொள்கிறோம் .மேலும் இன்று நடைபெற்ற நிகழ்வு போல அடுத்தடுத்து பல ரயில் நிலையங்களுக்கு சுற்றுப்புறச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வண்ணம் முன்னெடுத்து செல்ல “யாதும்ஊரே” முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது .