ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளி வந்து பெரும் வெற்றிப் பெற்ற 'த்ரிஷா இல்லன்னா நயன்தாரா' திரைப் படத்தை தொடர்ந்து, அந்தக் கூட்டணி மீண்டும் இணையும் படத்தை ஸ்டீவ்ஸ் கார்னர் என்கிற புதிய நிறுவனத்தின் சார்பில் ஸ்டீபன் தயாரிக்கிறார்.
த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஜி வி பிரகாஷ் -ஆதிக் கூட்டணிக்கு ஏற்பட்டு இருக்கும் பெரிய எதிர்பார்ப்பு , இந்தப் புதிய படத்தின் மீது படர்ந்த்திருக்கிறது. கதாநாயகி மற்றும் தலைப்பு தேர்வு நடைப் பெற்றுக் கொண்டு இருப்பதாக தயாரிப்பாளர் ஸ்டீபன் தெரிவித்தார்.
சமீபத்தில் வெளி ஆன 'பென்சில்'படம் மூலம் தனது நட்சத்திர அந்தஸ்தை மேலும் உயர்த்திக் கொண்ட ஜி வி பிரகாஷுக்கு இந்தப் படம் மேலும் பலம் சேர்க்கும். முதலில் திட்டமிட்டபடி நாங்கள் இந்த மாதமே படப்பிடிப்புக்கு புறப்பட்டு இருக்க வேண்டும் , ஆனால் கதாநாயகன் ஜி வி பிரகாஷுக்கு முன்னரே இருந்த படங்களின் படப்பிடிப்பு முடிவடையாததால் எங்களால் படப்பிடிப்புக்கு செல்லமுடியவில்லை. திரை துறையை சார்ந்தவனாக என்னால் இதை புரிந்துக் கொள்ள முடிந்தது. தற்போது நாங்கள் ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்புக்கு செல்ல உள்ளோம். ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன என்பதை நாங்கள் அறிவோம்.அதை நிச்சயம் வழங்குவோம்' என நம்பிக்கையுடன் கூறினார் தயாரிப்பாளர் ஸ்டீபன்.