0.7 C
New York
Tuesday, January 14, 2025

Buy now

spot_img

மிரட்டலுக்குத் தயாராகும் செய்

நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வெளிவர இருக்கும் படம்செய். மேலும் தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர சந்திரிகா ரவி என்ற அழகிய புதுமுகத்தைசெய் படக்குழுவினர் அறிமுகம் செய்துள்ளனர்.

ஆஸ்திரேலிய வாழ் தமிழ் பெண்ணான இவர் மாடலிங் துறையில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வந்திருக்கிறார். செய் படத்தின் முலம் தமிழ் திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்கும்சந்திரிகா ரவி 2014 ஆம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்திற்கான முதல் சுற்றில் தகுதி பெற்றவர்.

இது மட்டுமில்லாமல் கூடுதல் அம்சமாக புதுமுக நடிகரை கோலிவுட்டிற்கு அறிமுகம் செய்ய இருக்கிறார்கள் படக்குழுவினர். ஆஸ்கர் அலி என்ற இந்த புதுமுகம் கோ படத்தின் வில்லன், நடிகர் அஜ்மலின் தம்பி ஆவார். ராஜ்பாப இயக்கத்தில், ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை,வசனத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஒளிப்பதிவை விஜய் உலகநாதன் செய்துள்ளார். இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் நிக்ஸ் லோபஸ் ட்ரிப்பி டர்டில் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் மன்னு தயாரித்து வருகிறார். முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இப்படத்தை அக்டோபர் மாதம் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE