சுமாரான பையன் எப்பவுமே சூப்பரான பெண்ணை தேடி அலைவது சகஜம்தான். ஆனால் சுமாரா இருக்குற பையனுக்கு சூப்பரான பெண் விரும்பியோ விரும்பாமலோ மனைவியாக அமைந்தால் என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்ள வேண்டுமா. மாலை நேரத்து மயக்கம் படத்தை பாருங்க.
நாயகன் பிரபு (பாலகிருஷ்ணா) அப்பா பிள்ளை. அவரின் பேச்சை கேட்டே வளர்ந்த இவர் காதலுக்காக ஏங்குகிறார். ஒரு கட்டத்தில் காதலி கிடைக்காமல் அப்பா (அழகம் பெருமாள்) பார்த்த பெண்ணான மனோஜிதாவை (வாமிகா) மணக்கிறார்.
வாமிகாவோ டோட்டல் மாடர்ன். நிறைய ஆண் நண்பர்களை கொண்டவர். கணவன், மனைவியாக இருவரும் சேர்ந்து வாழ்ந்தாலும் செக்ஸ்க்கு தடை போடுகிறார் வாமிகா. இதனால் ஒருமுறை பலவந்தமாக உறவு கொள்ளும் நாயகனை விட்டு பிரிந்து செல்கிறார் வாமிகா. விவாகரத்து வரை சென்ற இவர்களது வாழ்க்கை பின்னர் என்ன ஆனது? மீண்டும் இணைந்தார்களா? என்பதே படத்தின் கதை.
அறிமுக இயக்குநராக கீதாஞ்சலி செல்வராகவன் தமிழ்சினிமாவிற்கு கிடைத்துள்ளார். அதுமட்டுமின்றி செல்வராகவன் கதை என்பதால் அதனை கொஞ்சமும் கெடுக்காமல் கதைக்கு உயிர் கொடுத்து திரையில் காட்டியிருப்பது அருமை. வெல்கம் மேடம்...
இசை அம்ரித்தின் மாலை நேரத்து மயக்கம் என்ற பாடல் படத்தின் ஹைலைட். பின்னணி இசையிலும் பட்டைய கிளப்பியிருக்கிறார் இவர். ஒளிப்பதிவு ஸ்ரீதரின் அற்புதமான காட்சிகள் கண்களுக்கு விருந்தாகியுள்ளது.
மொத்தத்தில் மாலை நேரத்து மயக்கம் தமிழ்சினிமாவில் அழிக்க முடியாத சிற்பம்