E5 என்டர்டெய்ன்மென்ட் மற்றும் இமேஜனரி மிஷின்ஸ் தயாரித்து பரிநிதா புரொடக்ஷன்ஸ் சுந்தர்.சி.பாபு வழங்கும் திரைப்படம் “அட்டி”.
இப்படத்தின் இயக்குனர் விஜயபாஸ்கர் ஆவர். இவர் மாப்பிள்ளை,அலெக்ஸ்பாண்டியன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் அவரின் உதவி இயக்குனராக பணியாற்றி “அட்டி” திரைப்படத்தின் மூலம் இயக்குனராகிறார்.
ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அர்ஜூன் இப்படத்தின் ஒளிப்பதிவாளர். இவர் மெய்யழகி திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகினார்.
சுந்தர்.சி.பாபு. இவர் சித்திரம் பேசுதடி, அஞ்சாதே, நாடோடிகள், ஆகிய வெற்றிப்படங்களின் வரிசையில் “அட்டி”திரைப்படமும் தமக்கு மாபெரும் வெற்றியை தரும் வகையில் பாடல்கள் அனைத்தும் அனைவரையும் கவரும் வகையில்அற்புதமாக இசையமைத்துள்ளார்.
படத்தொகுப்பு : M.V.ராஜேஷ் குமார். இவர் வேலையில்லா பட்டதாரி, சலிம் ஆகிய வெற்றிபடங்களின் படத்தொகுப்பாளர். அட்டி திரைப்படமும் இவ்வெற்றியின் வரிசையில் வரும் வகையில் படத்தொகுப்பை மிகநேர்த்தியாக கையாண்டுள்ளார
சண்டைபயிற்சி “பவர் பாண்டியன் மாஸ்டர் (இவர் முன்னனி கதாநாயகர்களின் சண்டைபயிற்சி ஆசான்) அட்டி திரைப்படத்தின் அனைத்து சண்டைக் காட்சிகளையும் மிகவும் தத்துருபமாக வடிவமைத்துள்ளார்.
இப்படத்தின் பாடல்கள் சினேகன், கானா வினோத், கவிவர்மன், மற்றும் விஜயசாகர் ஆகியோர் எழுதி உள்ளனர்.
சுரேஷ். முன்னனி நடன இயக்குனர் ராபர்ட் மாஸ்டர்-ன் ஆஸ்தான உதவியாளரான இவர் அட்டிதிரைப்படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமாகிறார்.
கலை : ஏழுமலை ஐயப்பன்
இந்த படத்தின் கதாநாயகனாக மா.கா.பா. ஆனந்த். வானவராயன் வல்லவராயன் திரைப்படத்தை அடுத்து இவர் இந்த படத்தில் கதாநாயகனாக அறிமுகம்மாகிறார். சென்னையை மையமாக கொண்ட இக்கதைகளத்திற்கேற்ப தன்னை உருவாக்கிக் கொண்டு கதையின் நாயகனாக மிக அற்புதமாக நடித்துள்ளார்.
மா.கா.பா. ஆனந்திற்கு ஜோடியாக அறிமுக நாயகி அஷ்மிதா நடிக்கிறார் . மிகவும் சிறப்பாக தனது கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ராம்கி நடித்துள்ளார்.இவர் இதுவரை நடித்தபடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வேடத்திலும் கதாப்பாத்திரத்திலும் நடித்துள்ளார். அட்டி திரைபடத்தில் மீசைஇல்லாமல் அற்புதமான தோற்றத்துடன் வருகிறார்.
இவர்களுடன் முன்னனி நட்சத்திரங்கள் நான் கடவுள் ராஜேந்திரன், அருள்தாஸ், அழகு, ராம்ஸ், மகாநதிசங்கர், யோகிபாபு, கலை, மிப்பு, தங்கதுரை ஆகியோரும் நடித்துள்ளனர்.
சென்னையின் மையப்பகுதிகளான காசிமேடு, ராயபுரம், ஐஸ்ஹவுஸ் ஆகிய பகுதிகளில் வசிக்கும்இளைஞர்களின் யதார்த்தமான வாழ்க்கையையும் அன்றாடம் அவர்கள் சந்திக்கும் அனைத்து விஷயங்களையும் சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் விவரிக்கும் கதைக்களமே “அட்டி”. இதில் கதாநாயகன் கானா பாடகராகவும், அஜித்ரசிகராகவும் நடித்துள்ளார். கதாநாயகன் தன்னை சுற்றி நடக்கும் ஒரு சம்பவத்தை தன் நண்பர்கள் உதவியோடு எப்படிகையாளுகிறார் என்பதே கதையின் கரு...