-0.2 C
New York
Wednesday, December 4, 2024

Buy now

spot_img

மதுரையில் முதன்முறையாக நடந்த நடிகர் திலகம் நடித்த “சிவகாமியின் செல்வன்” படத்தின் டிரைலர் வெளியிடு விழா

மதுரை மாநகரத்தில் எத்தனையோ சினிமா நிகழ்ச்சிகள் நிகழ்ந்துள்ளன. ஆனால் இன்று முதன் முறையாக டிரைலர் வெளியிடு விழா நடந்துள்ளது.

1974 ஆம் ஆண்டு கண்ணதாசன், வாலி, புலமைபித்தன் ஆகியோர் பாடல் வரிகளில், எம்.எஸ். விஸ்வநாதன் இசையில், CV ராஜேந்திரன் இயக்கத்தில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், வானிஸ்ரீ, லதா, MN ராஜம், நடிப்பில் வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற “சிவகாமியின் செல்வன்” திரைப்படம் தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் டிஜிட்டல் செய்யப்பட்டு மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் வெளிவரவுள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியிடு விழா இன்று மதுரையில் உள்ள பிரியா காம்பளக்ஸ் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த முயற்சி மறைந்த விமான ஓட்டி, Flight Lieutenant திரு. பிரவின் அவர்களுக்காக சமற்பிக்கபட்டது. இவ்விழாவை பிரவின் அவர்களின் தாயார் திருமதி மஞ்சுளா அவர்கள் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார்.

நிதியரசர் R. பொன்னுசாமி அவர்கள் “சிவகாமியின் செல்வன்” (Digitally Remastered Version) டிரைலரை வெளியிட கமலா சினிமாஸ் VNCT வல்லியப்பன் அவர்கள் பெற்றுகொண்டார்.

விழாவிற்கு திரு.K.ஈஸ்வரமூர்த்தி MA (மதுரை சிவா மூவிஸ், தாளாளர், கிரேஸ் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி, மதுரை) மற்றும் திரு. ஆர். செல்வின்ராஜ் (மதுரை ராம்நாட் யுனைடெட் பிலிம் டிஸ்டிரிபுயுட்டர்ஸ் அசோசியேஷன்) அவர்கள் தலைமை தாங்க, திரு. அன்னபூர்ணா T.தங்கராஜ் (தலைவர், மதுரை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமீட்டி) முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினர்களாக திரு. என். நன்மாறன் (Ex. MLA), திரு. B. ஜான் மோசஸ் (மாநில பொது செயலாளர், மதசார்பற்ற ஜனதாதளம்), திரு. சொக்கலிங்கம் (திவ்யா பிலிம்ஸ்) மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Air Force Association சார்பாக சுமார் 200க்கு மேற்பட்டவர்களும், மாயாண்டி பாரதி மேல்நிலை பள்ளியிலிருந்து சுமார் 300 மாணவர்களும் இவ்விழாவில் கலந்துகொண்டனர். மேலும் சென்னை, திருச்சி, சேலம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பெருவாரியான நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ரசிகர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவின் ஏற்பாடுகளை ஸ்ரீ சூர்யா மூவிஸ் திரு குணசேகரன், மதுரை சிவா மூவிஸ் திரு கா. சுந்தர்ராஜன், பிரபு வெங்கடேஷ், ரமேஷ் பாபு, பழினிசாமி, பாண்டி, குமார், கார்த்திகேயன், சோமசுந்தரம் செய்திருந்தனர்.

கனகசபை தயாரிப்பில் உருவான நடிகர் திலகத்தின் “சிவகாமியின் செல்வன்” (Digitally Remastered Version) படத்தை மதுரை சிவா மூவிஸ் மற்றும் ஸ்ரீ சூர்யா மூவிஸ் தமிழ்நாடு முழுவதும் வெளியிடுகிறது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE