மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘ஓகே கண்மணி’.
‘கடல்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்தப் படம் பற்றி எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடாத இயக்குனர் மணிரத்னம் திடீரென இந்தப் படத்தை ஆரம்பித்தார்.
குறுகிய காலத்திலேயே விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று முடிந்தது. காதலர் தினத்தன்று இந்தப் படத்தின் முதல் பார்வையை வெளியிட்டனர்.
அடுத்த மாதம் படத்தின் இசை வெளியீடும், அதற்கடுத்த மாதம், அனேகமாக, ஏப்ரல் 14ம் தேதி படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.