சமீபத்தில் போக்கிரி ராஜா திரைப்படம் திரைக்கு வந்து வெற்றிநடை போடுகிறது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் சிபிராஜ் மிதந்து கொண்டிருக்கிறார். அதுவும் குழந்தைகள் மற்றும் குடும்பம் குடும்பமாக கொண்டாடுவதில் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார்.
இத்திரைப்படத்தில் Cooling Glass குணா என்ற கேரக்டரில் படம் முழுக்க கூலிங்கிளாஸ் அணிந்து கொண்டு கேரளா வேஷ்டியும் வித்தியாசமான கெட்டப்பில் கலக்கியிருக்கிறார்.
ரெஸ்டாரண்ட்கள், பார்லர்கள்,காம்ப்ளக்ஸ்கள் என்று எங்கு சென்றாலும் சிபிராஜ்ஜை கூலிங்கிளாஸ் குணா என்றே அழைக்கிறார்கள். ரசிகர்கள் மற்றும் மக்களின் பட்டப்பெயரால் மகிழ்ச்சி அடைந்த சிபிராஜ் தொடர்ந்து எங்கு சென்றாலும் படத்தின் வித்தியாசமான கெட்டப்போடு சுற்றி வருகிறார். நாய்கள் ஜாக்கிரதை யைத் தொடர்ந்து போக்கிரி ராஜா படமும் வெற்றி பெற்றுள்ளதால் இரட்டிப்பு சந்தோசத்துடன் வலம் வருகிறார்.
கூலிங்கிளாஸ் குணா கேரக்டர் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதால் தொடர்ந்து இதே போன்று வித்தியாசமான கேரக்டர் மற்றும் கெட்டப்பில் நடிக்க சந்தர்ப்பம் உள்ள கதைகளில் மட்டுமே நடிக்க முடிவெடுத்திருக்கிறார் சிபிராஜ்.