12.9 C
New York
Thursday, October 10, 2024

Buy now

spot_img

போக்கிரி ராஜா ஆடியோ வெளியீட்டு விழாவில் காதலர்களுக்குள் கலவரம் அத்துவிட்டா அத்துவிட்டா பாடல் ஏற்படுத்திய பரபரப்பு..

நடிகர் ஜீவா, ஹன்சிகா, சிபிராஜ் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள “போக்கிரி ராஜா” படத்தின் இசை வெளியீட்டு விழா கோயம்புத்தூரில் பிரம்மாண்டாமாக நேற்று நடைபெற்றது. இதில் சினிமா பிரபலங்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், பாபி சிம்ஹா, நந்திதா, விமல், சத்யராஜ், ரோபோ சங்கர், முனிஷ்காந்த் என பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்த விழாவில் இசையமைப்பாளர் இமான் லைவ் கன்சர்ட் நடைபெற்றது. ஏற்கனவே பட்டித்தொட்டி எங்கும் ஹிட்டாகியுள்ள நிலையில் இந்த பாடலை இமான் மேடையில் பாடும்போது விழாவிற்கு வந்திருந்த நட்சத்திரங்களை மேடைக்கு அழைத்து ஆட வைத்தார். “அத்துவுட்டா” பாடல் இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமாகியுள்ளதால் நிகழ்ச்சிக்கு வந்திருந்த பார்வையாளர்கள் பலர் இந்த பாடலுக்கு எழுந்து நின்று ஆடி, பாடி மகிழ்ந்தார்கள். இதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டு போலீஸ் வந்து அவர்களை அமைதியாக்குவதற்குள் சிறிய சலசலப்பு நடந்துவிட்டது.

காதலர் தினமான நேற்று விழாவை சிறப்பிக்கும் வகையில் விழாவிற்கு வந்திருந்த எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் இருவரும் மாலை மாற்றி காதலர் தினத்தை மேடையிலேயே கொண்டாடினர்.

இமான் இசை நிகழ்ச்சிக்கு பெரிய வரவேற்பு கிடைத்ததால் தொடர்ந்து இதுமாதிரியான இசை நிகழ்ச்சியை அவர் நடத்த வேண்டும் என்று கேட்கத் தொடங்கிவிட்டனர் கோயம்புத்தூர் வாசிகள்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE