தமிழ்கலாச்சாரத்தில் பெண்களை கேவலப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ள இந்த பீப் சாங் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. புறநானூறு, அகநானூறு காலம் தொட்டு இதுபோன்ற வன்மமான வார்த்தையை வைத்து இதுவரை எந்த கவிஞரும் எழுதியது கிடையாது. சிம்பு அளித்த பேட்டியில் இன்னும் தன் தரப்பை நியாயப்படுத்தியே பேசியிருக்கிறார். T.ராஜேந்தர் மீது எப்போதும் மக்களுக்கு தனிப்பற்று இருக்கிறது. காவல்துறை தக்க நடவடிக்கை எடுத்து சிம்புவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
பாடல்ஆசிரியர்களை கௌரவமாக பார்க்கும் சமுதாயத்தில் இதுமாதிரி ஊதாரிகளினால் கவிஞனுக்கு மரியாதை இல்லாமல் போகிறது. தமிழை நம்பி பயணிக்கும் என்னைப்போல எத்தனையோ கவிஞர்களின் மனம் இதனால் வேதனையடைகிறது. இவர்கள் தமிழ் தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்காவிட்டால் 1000 பேரை அழைத்துசென்று போராட்டத்தில் ஈடுபடுவேன் இது உறுதி …தமிழகபோலீசார் வேடிக்கை பார்காமல் உடனடியாக கைதுசெய்யவேண்டும் மற்றவர்களுக்கும் அச்சம் பயக்க வேண்டும்.