குறும் படங்கள் திரைத் துறைக்கு , படம் இயக்க வருபவர்களின் தரத்தை வெகுவாக உயர்த்தி உள்ளது. புதிய சிந்தனைகள் குறும் படங்களின் முதுகு எலும்பாக இருந்து ,அத்தகைய படம் எடுக்கும் இளைஞர்கள் திரைத் துறையில் சுலபமாக தடம் பதிக்க உதவுகிறது.உணர்வுகள் ஒவ்வொரு படத்துக்கும் மாறுப்படுவது குறும் படத்தின் பெரும் பலம் எனலாம். புதியத் திறமைகளை அறிமுகப் படுத்துவதில் முன்னோடியாக இருக்கும் Bench culture நிறுவனம் , இத்தகையத் திறமைகளை அடையாளம் கண்டு அவர்கள் இந்தத் துறையில் ஜொலிக்க, வெல்ல, பல்வேறு உதவிகளை செய்து வருவதுக் குறிப்பிடத் தக்கது. மனோஜ் குமார் நடராஜன் என்ற ஒரு புதிய இயக்குனர் ஒரு புதிய சிந்தனையை அறிமுகப் படுத்தும் 'பெஞ்சமின்' culture machine நிறுவனத்தாரின் அடுத்தப் படைப்பாக வெளி ஆகிறது.
' ஒரே சம்பவம் பல்வேறு இடங்களில் ஒன்றுக்கொன்று தொடர்ப்பு இல்லாவிட்டாலும் ஒரே நேரத்தில் அரங்கேறுவது ' என்ற ஒரேக் கருத்தை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்படும் இந்தப் படம் culture machine நிறுவனத்தாரின் புதிய முயற்சிகளுக்கான ஊக்குவித்தலில் ஒரு புதிய அரங்கேற்றம்.