நவீன உலகின் அடையாளங்களில் ஒன்று சிகையலங்காரம். ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு சிகையலங்காரம் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ளது. எல்விஸ் ப்ரெஸ்லி, மைக்கேல் ஜாக்ஸன், லியானர்டோ டி காப்ரியோ என மேற்குலக பிரபலங்களின் சிகையலங்காரம் நம்மை வியக்க வைத்துள்ளன. அத்தகைய சிகையலங்காரஙகள் நமக்கு கிடைக்காதா என்று எண்ணி ஏங்கிய வேளையில் தான், புதுச்சேரியில் தடம் பதித்தது உலகின் பாரம்பரிய மிக்க சிகையலங்கார சேவை மையமான டோனி அண்ட் கய். இங்கிலாந்தை பூர்விமாக கொண்ட இந்த நிறுவனம் தமிழ்நாட்டில் ஏற்கனவே பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. தற்போது தனது புத்தம் புதிய கிளையை புதுச்சேரியின் வள்ளலார் சாலை, வெங்கடா நகர், பிளாட் எண் 16-17 ஆதி எண்டர்பிரைசஸ் என்ற முகவரியில் திறந்துள்ளது டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல். இக்கிளையை புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய திரு.ரங்கசாமி அவர்கள் திறந்து வைத்தார். விழாவில் பால்சன் குழுமத்தின் இயக்குனர் திரு. சாம்பால், மற்றும் தலைமை செயல் அலுவலர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
டோனி அண்ட் கய் நவீன சிகையலங்கார மையத்தின் திறப்பு விழாவுக்கு பின்னர் நடைபெற்ற வண்ணமிகு பேஷன் ஷோ இத்தனை சிகையலங்காரங்களா என்று வியக்குமளவுக்கு பார்வையாளர்களை கவர்ந்தது.. கண்ணை கவரும் உடைகளுடனும், கருத்தை கவரும் நவீன சிகையலங்காரத்துடனும் அழகிகளும், இளைஞர்களும் மேடையில் வலம் வந்தனர். இந்த பேஷன் ஷோவுக்கு சிகரம் வைத்தார்போல் இருந்தது சிறப்பு அழைப்பாளரான நடிகை ஷாக்சி அகர்வாலின் பங்கேற்பு.
நவீன நாகரீகத்தை தீர்மானிக்கும் விஷயத்தில் தங்களது டோனி அண்ட் கய் ஷோரூம் விளங்குவதாக பெருமிதம் கொள்கிறார் புதுச்சேரி வள்ளலார் சாலை டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் ஷோரூமின் ப்ரான்சைஸ்-ஆன திரு.நாராயணசாமி. பரந்து விரிந்து காணப்படும் டோனி அண்ட் கய் எஸ்ஸான்சுவல் மையத்தில் இருபாலருக்கான மையம், பெண்களுக்கான தனிப்பிரிவு, நீராவியுடன் கூடிய ஸ்பாக்கள், மணமக்கள் மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கான 1 தனியறை, நவீன வகை டாட்டூ போன்றவை இதன் சிறப்பம்சங்கள் ஆகும்.
உங்களை நீங்களே புதியவராக உணர வேண்டுமா.. வாருங்கள், மாற்றத்தை உணருங்கள்..
டோனி அண்ட் கய்-யில்..