6 C
New York
Saturday, November 9, 2024

Buy now

spot_img

‘பிரேமம்’ புகழ் நிவின் பாலியின் ‘ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம்’ நாளை வெளியீடு

'நேரம்' படம் மூலம் தமழ் சினிமாவில் அறிமுகமாகி, 'பிரேமம்' படத்தின் வாயிலாக அனைத்து பெண்களின் நெஞ்சங்களையும் கொள்ளை கொண்டு போன நடிகர் நிவின் பாலி.

இவருடைய படங்களான 'வடக்கன் செல்பி' மற்றும் 'ஆக்க்ஷன் ஹீரோ பிஜு' சக்கைபோடு போட்ட நிலையில், தற்போது வெளியாக உள்ள 'ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம்', கேரள மற்றும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் வினீத் ஸ்ரீநிவாசனும், நிவின் பாலியும் இரண்டாவது முறையாக கைகோர்த்துள்ளனர். முற்றிலும் வித்யாசமான கதைகளை தேர்ந்தெடுப்பது மட்டுமல்லாமல், தம் மாறுப்பட்ட கதாப்பாத்திரங்களாலும் பார்வையாளர்களை கவர கூடியவர் நிவின். " ஜேகப்ந்தே சுவர்க்க ராஜ்ஜியம் கண்டிப்பாக ஒரு குடும்ப காவியமாக கொண்டாடப்படும் ஒரு திரைப்படம்.

இந்த படத்தில் என்னுடைய பங்கும் இருப்பது எனக்கு பெருமையாக உள்ளது", என்கிறார் நம்பிக்கை நட்சத்திரமான நிவின் பாலி.⁠⁠

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE