20.4 C
New York
Thursday, November 7, 2024

Buy now

spot_img

பழம்பெரும் நடிகர் அமரர் .ஐசரி வேலன் அவர்களது 29ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது.

பழம்பெரும் நடிகர் அமரர். ஐசரி வேலன் அவர்களது 29ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி இன்று நடிகர் சங்க வளாகத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் சங்க தலைவர் நாசர் ,பொது செயலாளர் விஷால் , பொருளாளர் கார்த்தி , துணை தலைவர் பொன்வண்ணன் , செயற்குழு உறுப்பினர்கள் பசுபதி ,ஸ்ரீமன் ,S.பிரேம்குமார் ,A.L.உதயா .S.D.நந்தா , தளபதி தினேஷ் , சங்கிதா ,அறங்காவல் குழு உறுப்பினர் S.V.சேகர் , நியமன செயற்குழு உறுப்பினர்கள் ஹேமச்சந்திரன் , காஜா மைதின், வாசுதேவன் மற்றும் நடிகர் K.ராஜன் ,நடிகர் க்ரிஷ் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் சங்கத்தை சேர்ந்த 1௦௦௦ நலிந்த கலைஞர்களுக்கு அறங்காவல் குழு உறுப்பினர் ஐசரி கணேஷ் வேஷ்டி , சேலை வழங்கினார்.அதுமட்டுமின்றி நடிகர் சங்க உறுப்பினர்களது குழந்தைகள் 153 பேருக்கு கல்வி வசதியும் , நடிகர் சங்கத்தின் மூத்த உறுப்பினர்களுக்கான உதவி தொகையை ரூபாய் 5௦௦இல் இருந்து ருபாய் 1௦௦௦ மாக உயர்த்தி தர முன்வந்துள்ளார்.

விழாவில் பேசிய ஐசரி கணேஷ் , நடிகர் சங்க கட்டிடம் இருந்த வரை என்னுடைய தந்தை அமரர்.ஐசரி வேலன் அவர்களுடைய நினைவு அஞ்சலி விழா நடிகர் சங்கத்தில் வைத்து தான் நடைபெற்றது. நடிகர் சங்க கட்டிடத்தை இடித்த பின்னர் தந்தையின் நினைவு அஞ்சலி விழா எங்களுடைய கல்லூரியில் வைத்து நடைபெற்று வந்தது. இப்போது மீண்டும் நடிகர் சங்க வளாகத்தில் வைத்து நடைபெறுவது எனக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பத்து நாட்களுக்கு முன்னர் உலக நாயகன் கமல் ஹாசன் அவருடைய திரைப்படத்தின் துவக்க விழாவை இங்கே வைத்து தான் நடத்தினார் அதன் பின்னர் இப்போது நான் இங்கு விழாவை நடத்தியுள்ளேன். விழாக்கள் இங்கே தொடர்ந்து நடக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம்.

நடிகர் சங்க கட்டிடத்தில் என் தந்தை திரு. ஐசரி வேலன் அவர்களது பெயரில் 350 பேர் அமரும் வசதி கொண்ட மண்டபம் ஒன்றை நான் கட்டி தரவுள்ளேன். அந்த மண்டபம் ஏ.சி வசதி கொண்ட மண்டபமாக இருக்கும். இந்த மண்டபத்தில் நடிகர் சங்க உறுப்பினர்கள் அனைவரும் தங்களுடைய இல்லத் திருமண விழாக்களை கட்டணம் ஏதும் இன்றி இலவசமாக நடத்தலாம் என்று கூறினார்.

நாசர் பேசுகையில்

ஐசரி வேலன் சிறந்த மனிதர் அவர் வளர்ந்த விதம் அவர் கண்ட கனவு என எல்லாவற்றையும் கேட்டு தெரிந்து கொண்ட பொழுதுதான் எங்களுக்கு தெரிந்தது. நாங்கள் ஐசரி வேலனின் கனவைதான் இன்று வரைக்கும் நடிகர் சங்கத்தில் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம் என்று .அன்று நடிகர்சங்க வளர்ச்சிக்காக அவரும் எங்களை போலவே தேர்தலை சந்தித்தார். நடிகர்சங்கத்தைப் பற்றிய அவர் கனவும்’ நோக்கமும் தான் எங்களுக்கு முக்கியம்.இன்று வரை அவருடைய கனவைத்தான் நாங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோமே தவிர எங்களுடைய கனவை அல்ல

இந்த நிகழ்வு அவர்களுடைய குடும்ப வளாகத்தில் நடந்திருக்கலாம். ஆனால் இந்த மண்ணில் நடக்க வேண்டும் என்பது ஐசரி கணேசின் ஆசையாக இருந்திருக்கிறது.

இந்த ஆறு மாதங்களில் நடிகர் சங்கம் பெரும் வளர்ச்சியை கண்டிருக்கிறது என்றால் அதில் ஐசரி கணேஷ்க்கும் பெரும் பங்கு இருக்கிறது.

இந்த மண்ணிற்கு ஒரு மாதத்திற்கு முன்னால் அறங்காவல் குழு உறுப்பினர் கமல் ஹாசன் அவர்கள் ஒரு அழகு சேர்த்தார் ( படத்தின் பூஜை ) இன்று இங்கு ஒரு அழகு சேர்ந்திருக்கிறது.

கார்த்தி பேசுகையில்:

தன் குடும்ப விழாவை நடிகர் சங்கத்தில் நடத்தி உறுப்பினர்களை மீண்டும் சந்திக்க ஒரு வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

இந்த ஆறு மாத காலத்தில் உறுப்பினர்களுக்காக நிறைய சலுகைகள் ஒய்வூதியம் , கல்வி ,மருத்துவ உதவி, என பல்வேறு திட்டங்கள் நிறைவேறியதற்க்கு முக்கிய பங்கு ஐசரி கணேஷ் அவர்கள்தான் .

சென்ற மாதத்தில் இருந்து 80 வயதிற்கு மேல் உள்ள உறுப்பினர்களுக்கு மாதம் 2000 ருபாய் ஒய்வூதியம் அனுப்பப்பட்டுவருகிறது.

அதுமட்டுமின்றி 70 வயதிற்கு மேற்ப்பட்டவர்களுக்கும் , ஊனமுற்றவர்களுக்கும் ஒய்வூதியம் கொடுப்பதற்காக கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது .அதுவும் வெகு விரைவில் அவர்களுக்கு சென்றடையும் .அதில் 150 பேருக்கு 500ருபாய் கொடுக்கப்பட்டு வந்திருந்தது . ஐசரி கணேஷ் அவர்கள் நமக்காக அந்த 150 பேருக்கு 1000 ரூபாயாக உயர்த்தி கொடுத்திருக்கிறார் .அது மட்டுமல்லாமல் ஐசரி கணேஷ் AC.சண்முகம் அவர்களிடம் கேட்டமைக்காக அவரும் 150 பேருக்கு ஒய்வூதியம் 1000 ரூபாயாக உயர்த்தி கொடுக்க முன் வந்துள்ளார்.

விழாவின் நிறைவில் ரூபாய் 1௦ லட்சத்துக்கான காசோலையை திரு. ஐசரி கணேஷ் அவர்கள் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE