சமீபத்தில் கும்பகோணத்தில் “ மனிதன் “ திரைப்படத்தை ஒளிபரப்பிய “ Can TV “ உரிமையாளரை நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் புகாரின் பேரில் திருட்டு வீடியோ தடுப்பு பிரிவு கண் காணிப்பாளர் . திருமதி ஜெயலக்ஸ்மி ஐபிஎஸ் உத்திரவின் படி காவல் ஆய்வாளர்கள் கைது செய்து கும்பகோணம் சிறையில் அடைத்தனர். இதை தொடர்ந்து இன்று திருட்டு வீடியோ பைரசி தடுப்பு ரைடு தமிழ்நாடு முழுவதும் ADGB Sunil Kumar IPS அவர்களின் தலைமையில் நடைபெற்றது. முக்கியமாக Sunil Kumar IPS அவர்களின் உத்தரவின் பேரில் கோயம்புத்தூர் பகுதியின் S.P எல்லா பகுதிக்கும் ஆய்வுக்கு சென்றுள்ளார். சென்றயிடத்தில் திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி விற்ற 25 கடைகளின் உரிமையாளர்களை அவர் உடனே கைது செய்துள்ளார்.
இதேபோல் மதுரையில் திருட்டு டி.வி.டி மற்றும் வி.சி.டி விற்ற 16 கடையின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை ADGB Sunil Kumar IPS உத்திரவின் பேரில் எஸ்.பி. ஜெயலக்ஸ்மி IPS அவர்களின் நேரடி பார்வையில் டி.எஸ்.பி நீதிராஜன் மற்றும் ஆய்வாளர்கள் திருமதி. ராஜேஷ்வரி மற்றும் பால முருகன் அவர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது.