விஷ்ணு மூவி மேக்கர்ஸ் சார்பில் காசிவிஸ்வநாதன், யோகராஜ் இருவரும் இனைந்து தயாரித்துள்ள படம் கள்ளத்தோணி. இதில் எடின்,யோகராஜ், தீபிகா, ராம், பாஸ்கர் என முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ளனர். படத்தைப்பற்றி இயக்குனர் சதாம் கூறியதாவது தர்மா என்ற தொழில் அதிபர் தனது கருப்பு பணத்தை கண்டுபிடித்த வருவாய் துறை அதிகாரியை கொள்ள கூலிப்படையை நியமிக்கிறார்.
கூலிப்படையும் அதிகாரியை கொலைசெய்கிறது அந்த கொலைக்கு பேசிய தொகையை தன் உதவியாளர் மூலமாக கூலிப்படை தலைவனுக்கு கொடுத்தனுப்புகிறார் தர்மா. ஆனால் அவர் பணத்தாசையால் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு தப்பிவிடுகிறார். கூலிப்படை தலைவன் தர்மாமீது கோபம் கொள்கிறான், தர்மாவிடம் கூலிப்படைக்கு கொடுக்க வேறு பணம் இல்லாத சூழ்நிலை.
இப்போது தர்மா கூலிப்படையிடமிருந்து எப்படி தப்பித்தார் என்பதை திரில்லராக, அதேநேரம் எதார்த்தமாகவும் சொல்லியிருக்கிறேன். இதன் படபிடிப்பு முழுவதும் திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்று பகுதியில் நடைபெற்றது , மேலும் படத்தில் நான்கு பாடல்கள் உள்ளது அதுவும் எதார்த்தமாகவே இருக்கும் என்கிறார் இயக்குநர். இப்படத்திற்கு இசை தேவா,ஒளிப்பதிவு தினேஷ், எடிட்டிங் சதாம்.