1.4 C
New York
Thursday, February 13, 2025

Buy now

spot_img

தெலுங்கில் வெற்றி பெற்ற இயக்குனர் சேரனின் ராஜாதி ராஜா

இயக்குனர் சேரனின் இயக்கத்தில் உருவான ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பான ராஜாதி ராஜா கடந்த 24 ம் தேதி தெலுங்கு மாநிலம் முழுவதும் வெளியானது. சுமார் 250 திரையரங்கில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் மிக பெரிய வெற்றியையும், சேரனுக்கு மிக நல்ல பெயரையும் வாங்கி தந்துள்ளது. நீண்ட நாட்களாக வெளியிட முடியாமல் இருந்து, இரண்டு முறை தேதி தள்ளிவைக்கப்பட்டு தற்போது இந்த படம் வெளியாகி இவ்வளவு பெரிய வெற்றியை அமைந்துள்ளதை தெலுங்கு சினிமா உலகம் ஆச்சர்யமாக பார்க்கிறது. சர்வானந்த் - நித்யா மேனன் என்ற அதிர்ஷ்ட ஜோடியும் இதற்க்கு ஒரு காரணம். சர்வானந்த் ஏற்கனவே இரண்டு ஹிட்களை கொடுத்து, இப்போது மூன்றாவது ஹிட் கொடுத்துள்ளார்.

இதை தொடர்ந்து சேரன் அவரது "ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை திரைப்படத்தை தமிழில் திரையரங்குகளில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார். ஏற்கனவே DVD களில் வெளியிடபட்டிருந்தாலும் திரையரங்க உரிமையாளர்கள் கூட, இது நல்ல படம், இன்னும் நிறைய பேர் பார்க்கவில்லை. எனவே, மக்கள் பார்க்க தயாராக இருப்பார்கள். இப்போது சேரனுக்கு இருக்கும் பொருளாதார நெருக்கடியை சரி செய்ய அது உதவும்” என முன் வந்துள்ளனர்.ஜுலை 15 ம் தேதி அளவில் இப்படத்தை வெளியிடலாம் என்று சேரனும் முடிவு செய்துள்ளார். நல்ல திரைப்படம் எப்போதும் வெல்லும் என்பதை சேரனின் படம் மீண்டும் நிரூபித்துள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE