விஜய் நடித்து வெளிவர தயாராக இருக்கும் படம் தெறி இந்த படத்தை பற்றி ஒரு சில தகவல்கள் வெளிவந்தாலே ரசிகர்களியிடையே பெரும்வரவேற்பை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அட்லி இயக்கும் இந்த படத்தின் இசைவெளியிட்டு விழா வரும் 20 ஆம் தேதி சென்னையில் உள்ள பிரபல திரையரங்கம் ஒன்றில் நடைபெறுகிறது என்ற தகவல் வெளிவந்துள்ளது.
மேலும் இந்த படம் அடுத்த மாதம் அதாவது ஏப்ரல் 14 ஆம் தேதி (தமிழ் புத்தாண்டு) அன்று வெளியிடுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மற்றும் விஜயுக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடிக்கிறார், கலைபுலி தாணு தயரிக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் இவருக்கு இந்த படம் 60 படம் என்பது குறிப்பிடத்தக்கது.