இயக்குனர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, பார்த்திபன், ராஷி கண்ணா, மஞ்சிமா மோகன், கருணாகரன், பகவதி பெருமாள் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள துக்ளக் தர்பார் படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
ஜே.கே. நகரின் அரசியல் பெரும்புள்ளி ராயப்பன் (பார்த்திபன்). அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலனுக்கு (விஜய் சேதுபதி) ராயப்பனைப் போல ஆக வேண்டுமென ஆசை. எப்படியோ ராயப்பனை நெருங்கி, கவுன்சிலராகவும் ஆகிவிடுகிறார். இதற்குப் பிறகு, ராயப்பனும், சிங்காரவேலனும் சேர்ந்து ஒரு நில விவகாரத்திற்காக 50 கோடி ரூபாய் லஞ்சம் வாங்குகின்றனர்.
ஆனால், அது தொடர்பான ஆவணங்களை ஊடகங்களில் வெளியாகி விடுகிறது. மேலும் 50 கோடி ரூபாய் பணமும் காணாமல் போய் விடுகிறது. இதைச் செய்தது யார் எனத் தேட ஆரம்பிக்கிறார் ராயப்பன். அந்த நபர் யார், ஏன் இப்படிச் செய்கிறார் என்பது மீதிக் கதை.