திகில் படமாக உருவாகிறது
“மண்டோதரி”
ஏ.தக்ஷணாமூர்த்தி வழங்க மைல் ஸ்டோன் பிலிம்ஸ் பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ மண்டோதரி” என்று பெயரிட்டுள்ளனர்.
இந்த படத்தில் கதை நாயகனாக பா.ரஞ்சித்குமார் அறிமுகமாககிறார். இவர் வெங்கடேஷிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.
கதாநாயகியாகிகளாக தாரீனா, பிரியா நடிக்கிறார்கள்.
இன்னொரு நாயகனாக அமர் நடிக்கிறார்.
இவர்களுடன் பொன்னம்பலம்,பாண்டு, விசென்ட்ராய்,நாகலட்சுமி,சுபா, திருவாரூர் கருத்திருமன், கமலகண்ணன், எழுமலை, தியாகராஜன் இவர்களுடன் இயக்குனர் ஆர்.ஷம்பத் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - டி.மகிபாலன்
எடிட்டிங் - R.G.ஆனந்த்
பாடல்கள் - பழனிபாரதி, பா.ரஞ்சித்குமார், ஆர்.ஷம்பத்
திரைக்கதை, வசனம், இணை இயக்கம் பா.ரஞ்சித்குமார்.
எழுதி இயக்குபவர் ஆர்.ஷம்பத்... இவர் யாரது என்ற திகில் படத்தை இயக்கி இருக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஆர்.ஷம்பத்திடம் கேட்டோம்.....
மருத்துவ கல்லூரி மாணவர்களின் அஜாக்கிரதையால் கிராமத்துப் பெண் மண்டோதரிக்கு ஏற்படும் அசம்பாவிதம்...அந்த மாணவர்களின் வாழ்கையை எப்படி புரட்டிப் போடுகிறது என்பது தான் கதைக்களம்.
திகில் படமாக மண்டோதரி படம் உருவாகியுள்ளது. கேரளா, பாலக்காடு, குமுளி, சேலம் போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்திருக்கிறது.
விரைவில் திரைக்கு வர உள்ளது மண்டோதரி என்றார் இயக்குனர் ஆர்.ஷம்பத்.