15.3 C
New York
Thursday, December 12, 2024

Buy now

spot_img

தரமான படங்களின் தரத்தை உயர்த்த வரும் வெங்கடேஷ் ராஜாவின் வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்

நல்ல படங்களை வெளியிடுவதே எங்கள் தாரக மந்திரம் என்று கூறுவதோடு நில்லாமல் தரமான படங்களின் தரத்தையும் உயர்த்த வருகிறது “வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்”.

ஒரு வெற்றி படம் அமைவதற்கு நல்ல இயக்குனர், தயாரிப்பாளர், தொழில் நுட்ப கலைஞர்கள், நடிகர்கள் மட்டும் போதாது. அந்த படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில், விளம்பர நிறுவனங்களின் பணி முக்கிய பங்கு வகிக்கின்றது. பல வருடங்களுகளாக தன் அனுபவத்தின் மூலம், விளம்பர யுக்தி கையாண்டு பல வெற்றி படங்களுக்கும் துணை நின்ற வெங்கடேஷ் ராஜா தற்போது “வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல்” என்கிற நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர்.

வெங்கடேஷ் ராஜாவின் வெங்கிஸ் பிலிம் இண்டர்நெஷனல் தனது முதல் படைப்பாக WTF என்டர்டெயின்மென்ட் மற்றும் மூமன்ட் என்டர்டெயின்மென்ட் இனைந்து தயாரித்த “மோ” திரைப்படத்தை உலகமெங்கும் விமர்சையாக வெளியிடுகின்றது.

காமெடி கலந்த திகில் படமாக உருவாகும் இத்திரைப்படத்தில் சன் மியூசிக் தொகுப்பாளர் (VJ) சுரேஷ் கதாநாயகனாக நடிக்க, காக்கா முட்டை மற்றும் பல படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், இரைவி மற்றும் குற்றமே தண்டனை படத்தில் நடித்துள்ள பூஜா தேவரியா, சூது கவ்வும், நேரம் ஆகிய திரைப்படங்களில் நடித்த ரமேஷ் திலக், யுத்தம் செய், முகமூடி மற்றும் பல படங்களில் நடித்த செல்வா, முன்டாசுபட்டி படத்தில் நடித்த ராமதாஸ் (முனீஸ்காந்த்), யோகி பாபு, மெட்ராஸ் மற்றும் மாரி படங்களில் நடித்த ‘Mime” கோபி, ராஜதந்திரம் படத்தில் நடித்த சிவா ஆகியோர் நடிக்கின்றனர்.

இப்படத்தை புவன் நல்லான் R என்னும் புதுமுக இயக்குனர் இயக்குகிறார். இவர் இயக்குனர் செல்வா மற்றும் ஹோசிமின் ஆகியோரிடம் உதவியாளராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமனியனிடம் இணை ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த விஷ்ணு ஸ்ரீ k ஒளிப்பதிவு செய்ய, இனிமே இப்படிதான் திரைப்படத்தின் இசை அமைப்பாளரும், A R ரகுமானின் உதவியாளருமான சமீர் d சந்தோஷ்

இசையமைக்கிறார். கலை – பாலசுப்ரமனியன், படத்தொகுப்பு – கோபிநாத்.

இத்திரைப்படத்தின் வெளியீடு தேதி விரைவில் வெளியடப்படும் என்று கூறும் வெங்கடேஷ் ராஜா நல்ல பல தரமான படங்களை பார்த்து வெளியிடும் திட்டமுள்ளதாகவும், வெகு விரைவில் படங்களை தயாரிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE