தமிழ் சான்றோர் பேரவை நிறுவனரும்,நந்தன் பத்திரிகையின் ஆசிரியருமான நா.அருணாசலம் வயது 76. சென்னையில் நேற்று மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்..
.நாகப்பட்டினம் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள திருக்கண்ணபுரம் கிராமத்தில் பிறந்த இவர் பல வருடங்கள் வருவாய்துறையில் பணியாற்றினார்..1986 ல் அடையாறு மாணவர் நகலகத்தை தொடங்கி நடத்திவருகிறார்.. தமிழ் மீதும்,தந்தை பெரியாரின் மீதும் பற்று கொண்டவர்.. அத்துடன் நந்தன் வழி என்கிற பத்திரிகையையும் நடத்திவந்தார்.. 1995 ல் பெரியார் ##தமிழிசை மன்றத்தை தொடங்கி தமிழிசை சாதனையாளர்களை வருடந்தோரும் கவுரவித்துவந்தவர்..##தமிழ் சான்றோர் பேரவை தொடங்கி நடத்தினார் . அதன்சார்பாக 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் மாத த்தில் தமிழ்வழிக்கல்வியை வலியுருத்தி 102 தமிழ் அறிஞர்களின் சாகும்வரையிலான பட்டினிப்போராட்டம் நடத்தி தமிழ் வழி கல்விக்கான முக்கியத்துவத்தை அரசுக்கு உணர்த்தினார்.. நேற்று சென்னை 23.05.2016 அன்று மாலை 5 மணியளவில் இயற்கை எய்தினார்..அன்னாரது உடல் இன்று 24.05.2016 பிற்பகல் 2 மணிவரை சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள ராமலிங்கா நகர் ( SRP டூல்ஸ் அருகில்) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நாளை 25.05.2016 காலை 10 மணிவரை அவரது பூர்வீக கிராமமான நன்னிலம் வட்டம்,திருக்கண்ணபுரத்தில் இறுதி அஞ்சலி செலுத்த இருக்கிறது..நா.அருணாசலத்திற்கு சொரிராசன் என்கிற மகனும் வானதி ,வாசுகி ஆகிய இரண்டு மகள்கள் இருக்கின்றனர்..