தற்போது தங்கமகன் சம்பந்தமான இன்னொரு செய்தியும் கசிந்துள்ளது. படத்தில் தனுஷ் மற்றும் பிரிட்டீஷ் அழகி எமி ஜாக்சனுக்கு இடையே அப்படி ஒரு கெமிஸ்ட்ரி வேலை செய்திருக்கிறதாம். படத்தின் யதார்த்தத்தை காட்ட சில இடங்களில் முத்தக்காட்சி வைத்தார்களாம், அதுவும் லிப் லாக் காட்சிகளாம், இதேபோல் இரண்டாம் பாதியில் சமந்தாவுடனும் இந்த மாதிரி காட்சிகள் வருகிறதாம். ஆனால் படத்தை சென்சார் குழுவினர் பார்த்தபிறகு எமிஜாக்சன் முத்தக்காட்சிகளை நீக்கிவிட்டால் படத்திற்கு யு சான்றிதழ் தருகிறோம் என்று கூறினார்களாம்.
என்ன செய்வது என்று தெரியாமல் தனுஷ் - எமி ஜாக்சன் லிப் லாக் காட்சிகளை நீக்கிவிட்டாராம். ஆனால் சமந்தாவுடனும் தனுஷுக்கு முத்தக்காட்சி இருக்கையில் அதை மட்டும் ஏன் நிக்க சொல்லவில்லை என்று பெரும் குழப்பம் இருக்கிறதாம். ஒருவேளை அந்த காட்சிகளை கலையுணர்வோடு எடுத்திருப்பார்போல. படத்தை பார்த்தால் புரியும்...
எப்படியும் வரும் வெள்ளி தனுஷ் ரசிகர்களுக்கு பெரிய விருந்து காத்திருக்கிறது என்றுதான் சொல்லனும்...