ட்ராக்எக்ஸ்பிரஸ் நிறுவனம் www:myparcelonline.com என்ற புதிய வலைதளத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆன் லைன் மூலமாக பார்சல்களை கையாளும் நிறுவனங்களின் நிர்வாகப் பணிகளுக்கு இந்த வளைத்தளம் புதிய வழிகளை திறந்துவிடப்போகிறது. ட்ராக்எக்ஸ்பிரஸ் விநியோக தீர்வைகள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு.சுரன்ஜன் மல்லிக் இதுகுறித்து கூறுகையில் “ட்ராக்எக்ஸ்பிரஸ் விநியோக தீர்வைகள் நிறுவனத்தின் முன்னோடி தயாரிப்புதான் “ மைபார்சல் ஆன்லைன் டாட்காம்’ என்றார்.
இந்த தொழிலில் நீண்ட அனுபவம் உடைய நிபுணர்களால் நாடு தழுவிய அளவில் பயன்படக்கூடிய வகையில் இந்த வலைத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதுஇந்தியாவில் தற்போது உள்ள சரக்கு போக்குவரத்து சேவையின் முகத்தோற்றத்தை முற்றிலுமாகமாற்றி அமைக்கப்போகிறது. நாட்டில் தற்போது தகவல் தொழில்நுட்ப புரட்சி ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த தொழில்நுட்பம் சார்ந்த பயன்பாடுகளில் அதிக கவனம் செலுத்துப்பட்டு வரும் நேரத்தில் இந்த வலைத்தளம் அறிமுகப்படுத்தப்படுவது கூடுதல் சிறப்பம்சமாகும். மேலும் உலகத் தரத்திலான தொழில்நுட்பத்தை உள்ளூர் அளவில் குறைந்த கட்டணத்தில் வழங்குவதும் இதன் மற்றொரு சிறப்பம்சமாகும் ’’ என்றார்.
அனைத்து விதமான சேவைகளை வழங்குவோர் அனுப்பும் அனைத்து பார்சல்களுக்கும் ஓற்றைச்சாளர மூறையில் தீர்வைகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த www:myparcelonline.com. இது இந்தியாவில் முதல்முதலாக தொடங்கப்பட்டுள்ள ஆன்லைன் பார்சல் நிறுவனங்களுக்கான தொழில்நுட்பம் மட்டுமல்ல இந்தியாவில் தொழில் துவங்க வரும் புதிய நிறுவனங்களுக்குமான தொழில்நுட்பமும் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. பார்சல்களை வசதியாக புக் செய்வதற்கும் ஆன்லைன் மூலமாக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு அனுப்பிவைப்பதற்கும் எளிதான தொழில்நுட்பததை கொண்டது. மேலும் விநியோகத்திலும் எந்தவித இடர்பாடுகளும் இருக்காது. வாடிக்கையாளர்கள் விரும்பும் நேரத்தில் அவர்களது இருப்பிடங்களுக்கே சென்று விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் நிறுவனத்தின் சிடிஓ திரு.சந்தீப்சிங், சிசிஓ திரு.ஸ்ரீதர்பாகவத் ஆகியோர் உடனிருந்தனர்.
www:myparcelonline.com என்ற இந்த ஆன்லைன் பார்சல் வலைத்தள சாதனம் சுரன்ஜன் மல்லிக் தலைமையிலான குழுவின் தயாரிப்பு ஆகும். இவர் சரக்குபோக்குவரத்து சேவையில் 17 ஆண்டு காலம் அனுபவம் உடையவர். இவர் மிகப்பெரிய சரக்குபோக்குவரத்து நிறுவனங்களில் பணியாற்றியிருக்கிறார். டிரக்எக்ஸ்பிரஸ் விநியோக தீர்வைகள் நிறுவனம் உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் விமானம் மற்றும் கப்பல்களில் பார்சல்களை அனுப்பும் சேவையை செய்து வரும் 3வது தரப்பு நிறுவனமாகும். பார்சல்களை அனுப்புதல் பெறுதல் அதை பாதுகாப்பாக வைத்து விநியோகம் செய்தல் ஆகிய பணிகளை இந்த நிறுவனம் செய்து வருகிறது.