இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ள படமான டிக்கிலோனா திரைப்படத்தின் திரை விமர்சனத்தை இங்கே காணலாம்.
இன்று நேற்று நாளை போன்ற டைம் டிராவல் கதையில் காமெடி கலந்து வெளியான படமே டிக்கிலோனா.
முதல் காட்சியிலேயே ஹீரோயின் பிரியாவை (அனகா) காதல் திருமணம் செய்து கொள்கிறார் மணி (சந்தானம்). ஏழு ஆண்டுகளுக்கு பின் கணவன் மனைவி உறவில் தகராறு இருப்பதால் டைம் டிராவலில் போய் திருமணத்தை நிறுத்தப் பார்க்கிறார். அதே வாழ்க்கை திருமணம் நடக்காமல் வேறு பக்கமாக பயணிக்கிறது அந்த உறவும் சரியாக அமையாமல் போக அந்த சந்தானமும் மீண்டும் டைம் டிராவலில் ஏறி திருமணம் நடக்கும் நாளுக்கு வந்து விடுகிறார். பின்னர் மூவரும் சேர்ந்து எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் கதை.
எந்த வாழ்க்கையை தேர்ந்தெடுத்தாலும் அதில் இன்பதுன்பம் இருக்கத்தான் செய்யும். அதிலிருந்து தப்பிக்கவே முடியாது என்பதைதான் காமெடியுடன் சேர்த்து வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்ஷன் அமைப்பில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி.
