"விநாயகரின் துணை கொண்டர்வர்களுக்கு என்றுமே வெற்றி தான்..." என்பதற்கேற்ப, வருகின்ற விநாயகர் சதூர்த்தி (செப்டம்பர் 5) அன்று ஆரம்பமாக இருக்கின்றது, ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த பெயரிடப்படாத திரைப்படத்தின் படப்பிடிப்பு. ஒருபுறம் பிரபுதேவாவுடன் இணைந்து இயக்குனர் விஜய் இயக்கி இருக்கும் 'தேவி' மற்றும் 'ஜெயம்' ரவி நடித்து வரும் 'போகன்' திரைப்படங்கள் வர்த்தக உலகில் அமோக வரவேற்பை பெற்று வர, மறுபுறம் ஜெயம் ரவியுடன் கூட்டணி அமைத்து, தன்னுடைய வெற்றி பயணத்தை தொடர இருக்கிறார் இயக்குனர் விஜய். ஜெயம் ரவி - இயக்குனர் விஜய் கூட்டணியில் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இணைந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
"ஒரு நல்ல தொடக்கத்தை முக்கியமான நாளன்று ஆரம்பிப்பது தான் சிறப்பு....'கிரீடம்' படத்திற்கு பிறகு என்னுடைய ஒளிப்பதிவாளர் திரு சாருடன் மீண்டும் இந்த படத்திற்காக இணைந்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. யதார்த்தமான காட்சிகளை அற்புதமாக உருவாக்கும் திறமை படைத்த ஒரு கலைஞர் திரு சார்..." என்று உற்சாகத்துடன் கூறுகிறார் இயக்குனர் விஜய். இந்த ஆண்டு வெளியான '24' படத்தில் தன்னுடைய தத்ரூபமான காட்சி அமைப்பினால் அமோக பாராட்டுகளை பெற்றவர் ஒளிப்பதிவாளர் திரு என்பது குறிப்பிடத்தக்கது
மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்திருப்பதை பற்றி அவர் கூறுகையில், " ஜெயம் ரவியை ஒரு நடிகராக மட்டுமில்லாமல் என்னுடைய உடன் பிறவா சகோதரராகவும் தான் நான் பார்க்கின்றேன். அவரோடு இணைந்து பணி புரிய வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை... தற்போது எனது அந்த ஆசை இந்த நல்ல துவக்கத்தின் மூலம் இரட்டிப்பாக இருக்கின்றது..." என்கிறார் இயக்குனர் விஜய்