15.3 C
New York
Thursday, December 12, 2024

Buy now

spot_img

சென்னை சிட்டி கால் பந்து அணிக்காக உருவாக்கிய பாடல் ‘கோல் போடு’

விளையாட்டுக்கும் , இசைக்கும் சம்மந்தம் இருக்கும் என யோசித்துக் கொண்டு இருப்பவர்களுக்கு ஏ ஆர். ரஹ்மானுடைய சகோதிரியின் மகன் ஏ எச் காஸிப் இசை அமைப்பில் உருவாகி வெளி வந்து உள்ள ‘கோல் போடு’ என்றப பாடல் இசைக்கும் , விளையாட்டுக்கும் உள்ள உறவை தெள்ள தெளிவாக விளக்குகிறது.

‘ இசைக்கும் , விளையாட்டு துறைக்கும் மனிதக் குலம் தோன்றியக் காலத்தில் இருந்தே உறவு நீடித்துக் கொண்டே வருகிறது. பாரம்பரியம் மிக்க நமது சென்னை மாநகர் மக்களுக்கும் , நம்மோடு வாழ்ந்த கால் பந்து விளையாட்டுக்கும் காலத்தையும் தாண்டிய உறவு இருந்துக் கொண்டேயிருக்கிறது.

இதை சுட்டிக் காட்டி இப்பொழுது ‘ கோல் போடு’ என்ற பாடலை பதிவு செய்து இருக்கிறோம்.ஐ பி எல் போலவே சென்னையில் கால் பந்து அணிகளுக்கு இடையே நடக்கும் போட்டியில் ரோஹித் ரமேஷின் சென்னை சிட்டி கால் பந்து அணிக்காக உருவாக்கிய பாடல் இது. சென்னை மக்களுக்கு கால் பந்து மேல் உள்ள பிரியத்தை அடையாளம் காட்டும் பாடலாக இருக்கும் ‘கோல் போடு’.

பிரபல ஹிந்தி பாடகரும் இசை அமைப்பாளருமான விஷால் தட்லாணி இந்தப் பாடலை பாடி இருக்கிறார்.மோகன் ராஜ் பாடல் இயற்றுகிறார். லண்டன் பி பி சி நடத்தும் அஷாந்தி ஒம்காரின் ஷோவில் இந்த வாரத்துக்கான பாடலாக ‘ கோல் போடு’ தேர்வு செய்யப் பட்டு உள்ளது.

சென்னை நகருக்கும் , கால் பந்துக்கும் உள்ள காதலை ஒரு வீடியோ ஆக வெளியிடுகிறோம். இதை இயக்கி இருப்பவர் இளம் இயக்குனர் அஷ்வின் ரவீந்தரன். ஜி கே விஷ்ணு ஒளிப்பதிவில், ஸ்ரீதரன் ஜி கே ஒளிப்பதிவில் , சுரேஷ் சத்யா நடனம் அமைக்க, பிரபல ஆடை அலங்கார நிபுணர் சத்யா, ஏ எச் காசிப் மற்றும் விஷால் தட்லாணி ஆகியோருக்கு உடை அலங்காரம் செய்கிறார்

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE