இந்த ஆண்டுக்கான சென்னைப் புத்தகக் காட்சி ஜூன் 1 முதல் 13ஆம் தேதி வரை சென்னை தீவுத் திடலில் நடைபெறுகிறது. கவிஞர் வைரமுத்துவின் புத்தகங்களுக்கென்று மட்டும் இரு அரங்குகள் இக்காட்சியில் இடம் பெறுகின்றன.
கவிஞர் வைரமுத்து எழுதிய நூல்கள் மட்டும் அந்த அரங்குகளில் காட்சிக்கு
வைக்கப்படுகின்றன. “வைரமுத்து நூலரங்கம்” என்ற பெயரில் இயங்கும் அந்த அரங்குகளின் எண்கள்:614 மற்றும் 615.
இந்த அரங்கில் வைரமுத்துவின் மொத்த நூல்களும் சலுகை விலையில் கிடைக்கும். புத்தகக் காட்சியில் தன் அரங்குக்கு ஜூன் 4 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு வாசகர்களைச் சந்திக்கக் கவிஞர் வைரமுத்து வருகை தருகிறார்; வாசகர்கள் வாங்கும் தம் நூல்களில் கையொப்பமிடுகிறார். வாசகர்கள் அவரோடு புகைப்படமும் எடுத்துக்கொள்ளலாம்.
இந்த நிகழ்ச்சியை டிஸ்கவரி புக் பேலஸ் ஒருங்கிணைக்கிறது. தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்திகண்ணதாசன், பொதுச்செயலாளர் புகழேந்தி, பொருளாளர் ஒளிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் புத்தகக் காட்சியில் கவிஞர் வைரமுத்துவை வரவேற்கிறார்கள்.