ஆல் இன் பிக்சர்ஸ் முதல் தயாரிப்பாக உருவாகிவரும் படம் ‘மசாலா படம்’.
இப்படத்தை “வெண்ணிலா கபடி குழு, குள்ள நரி கூட்டம், போடா போடி, பாகன் , தில்லு முல்லு’’ ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த லக்ஷ்மன் குமார், விஜய ராகவேந்திராவுடன் இணைந்து தயாரிப்பதோடு படத்தை இயக்கவும் செய்கிறார்.
மிர்ச்சி சிவா, பாபி சிம்ஹா, புதுமுகம் கௌரவ் மற்றும் ‘நில் கவனி செல்லாதே’ படத்தில் நடித்த லக்ஷ்மி தேவி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கார்த்திக் ஆச்சார்யா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக இசையமைக்கிறார்.
படம் பற்றி இயக்குனர் லஷ்மன் குமார் கூறுகையில், “ஒரு ஒளிப்பதிவாளருக்கு ஒளியை பதிவு செய்வது மட்டும் முக்கியமில்லை. சுற்றி நடக்கும் விஷயங்களை கண்டும், கேட்டும், உணர்ந்தும் பதிவு செய்து கொள்வேன். அப்படி என்னுடைய திரை வாழ்வில் நான் அடிக்கடி சந்திக்க நேர்ந்த ஒரு விஷயம் மசாலா படங்கள் குறித்த விவாதம்.
நம்முள் இந்த அளவுக்கு ஊடுருவும் இந்த மசாலா படத்தின் தாக்கத்தை முதல் படமாக பதிவு செய்து கொள்ள விரும்பினேன். இப்படி ஒரு வித்தியாசமான கருவை மக்களிடையே கொண்டு செல்ல பிரதான கருவிகளாக மிர்ச்சி சிவாவும், பாபி சிம்மாவும் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் இசை மிகவும் பேசப்படும். இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது,” என்றார் இயக்குனர்.
கோடை விடுமுறையில் வெளி ஆக உள்ளது ‘மசாலா படம்’.