12.9 C
New York
Thursday, October 10, 2024

Buy now

spot_img

சின்ன பட்ஜெட் படத்தில் நடித்துத் தான் பெரிய நடிகர்கள் ஆனார்கள் கே.எஸ்.ரவிகுமார் பேச்சு

சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படத்திற்கு “ சண்டிக்குதிரை “ என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். சின்ன திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.
மற்றும் கஞ்சாகருப்பு, டெல்லி கணேஷ், சூர்யகாந்த், போண்டா மணி, ரிஷா அருள், பெருமாயி ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு - வீரா
பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் - வாரஸ்ரீ.. இவர் பக்தி பாடல்கள் எழுதுவதில் வல்லவர். இதுவரை 6000 பக்தி பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது பாடல்களை எல்லா பிரபல பாடகர்களும் பாடி இருகிறார்கள். “ நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா “என்ற பாடலும் அடக்கம். இவர் இசையமைக்கும் முதல் படம் இது.
கலை - கே.எஸ்.புவனா
நடனம் - தினா, சதீஷ்
ஸ்டன்ட் - டென்ச் ரமேஷ்
எடிட்டிங் - ஜூட் தேடன்ஸ்
இணை இயக்கம் - அருள்
தயாரிப்பு நிர்வாகம் - என்.எ.நாதன்
இணை தயாரிப்பு - பி.பிரகாசம்
தயாரிப்பு - சன்மூன் கம்பெனி
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் - அன்புமதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி உள்ளார். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குனராக, கதாசிரியராக பணியாற்றி இருக்கிறார். அத்துடன் நிறைய விளம்பரப் படங்களையும் இயக்கியுள்ளார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது..
விழாவில் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் பேசியதாவது....
சின்ன படம் சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள் . எது சின்ன படம் எது பெரிய படம் .. யார் நிர்ணயிப்பது வெற்றியை வைத்து தான்.
கமல் நடித்த அவர்கள் படம் வெறும் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப் பட்டதுதான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்று முடுச்சு படம் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப் பட்டதுதான். நான் இயக்கிய முதல் படமான புரியாத புதிர் முப்பது லட்சம் ரூபாய் செலவிலும், சேரன் பாண்டியன் முப்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிலும் தான் எடுக்கப் பட்டது. படங்கள் வெற்றிபெறும் போதுதான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகிறார்கள். சின்ன படமாக இருந்தாலும் நல்லா எடுத்திருக்கிறோம் என்பதில் மட்டும் திருப்தி அடைந்து விடாதீர்கள் .. இன்ட்ரஸ்டிங்கா எடுங்க அப்பத் தான் படமும் ஓடும் நீங்களும் “ பெரிய “ என்கிற இடத்தை அடைய முடியும் என்று பேசினார்.
இயக்குனர், நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது....இயக்குனர் அன்புமதி, நடிகர் ராஜ்கமல் இருவரும் சின்னத் திரையிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் சண்டிக்குதிரை படத்தை எடுத்து முடித்து இசை வெளியீட்டு விழா வரை வந்திருக்கிறர்கள் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். நான் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தபோது, ஒரு பெரிய நடிகரிடம் கதை சொன்னேன், கதை நன்றாக இருக்கு..சின்னத் திரை இயக்குனர் மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொண்டு விடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி வெளியே அனுப்பினார். இன்று நான் இயக்குனராகவும், நடிகராகவும் நிற்கிறேன்...அதனால் வெற்றி உங்கள் அருகில் தான் இருக்கு என்றார்.
விழாவில் ரவிமரியா, ஜாக்குவார் தங்கம், லியாகத் அலிகான், அரவிந்தராஜ், கஞ்சா கருப்பு, D.S.R.சுபாஷ் மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் பிரகாசம், ராஜ்கமல், நாயகி மானஸா, இசையமைப்பாளர் வாராஸ்ரீ, ஒளிப்பதிவாளர் வீரா, பாடகர் பிரசன்னா, இயக்குனர் அன்புமதி ஆகியோர் பேசினர்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE