சின்னதிரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் பெப்ஸி (FEFSI) உடனான “ ஊதிய உயர்வு “ சம்பந்தப்பட்ட பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜய குமார் , செயலாளர் குஷ்பூ ,பொருளாளர் டி.ஆர்.பாலேஷ்வர் பெப்ஸி தலைவர் சிவா , செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் , பொருளாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர்கள் ஊடங்கங்களிடம் பேசியதாவது :-
வெகு நாட்கள் பேச்சில் இருந்த ஊதிய உயர்வு சார்ந்த பிரச்சனைக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வுகாணப்பட்டது. சின்னத்திரை மிகவும் நலிந்து கொண்டு இருக்கிறது. இன்று தயாரிப்பாளர் சங்கமும் , பெப்ஸியும் கலந்து பேசி ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தத்தில் கை எழுத்துதிட்டுள்ளது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த ஒப்பந்தத்தில் கை எழுத்திட்டுள்ளோம். இந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் யாதெனில் 27.5% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த முறை 27.5% ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது இது மூன்று வருடங்களுக்கு தொடரும். இன்று முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஏழு பிரிவை சேர்ந்த 5௦௦௦ தொழிலாளர்களுக்கும் மேல் பயனடைவார்கள்.