17.7 C
New York
Saturday, September 30, 2023

Buy now

சிதேஷ் – சுவாசிகா நடிக்கும் “ பண்டுவம்

சிதேஷ் – சுவாசிகா நடிக்கும் “ பண்டுவம் “

எஸ்.சிவகுமார் இயக்குகிறார்

திகில் படமாக உருவாகிறது

ஜி.எஸ் டெவலப்பர் என்ற பட நிறுவனம் சார்பாக P.குணசேகரன் மூலக்கதை எழுதி தயாரிக்கும் படம் “பண்டுவம்”
இந்த படத்தில் சிதேஷ் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இவர் அப்பாவி, இவனும் ஒரு பணக்காரன், ஆகிய படங்களுடன் மேலும் சில படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.

கதாநாயகியாக சுவாசிகா நடிக்கிறார்.இவர் சாட்டை படத்தில் சமுதிரகனிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் மற்றும் கோரிப்பாளையம், மைதானம், ரணம் போன்ற படங்களின் நாயகி இவர். மற்றும் எஸ்.சிவகுமார், சுயம்பிரகாஷ், அனிமல் ஆண்டனி,அமிதாடேஸ், லாலிதயா,திவ்யா, ரிஷா ,சிம்ரன் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
வசனம் – சிவா / ஒளிப்பதிவு – முத்ரா
இசை – நிரோ / பாடல்கள் – பத்மாவதி
கலை – – விஜய்ஆனந்த் / எடிட்டிங் – யோகாபாஸ்கர்
ஸ்டன்ட் – விஜய் / நடனம் – ராதிகா
தயாரிப்பு நிர்வாகம் – ராஜா / தயாரிப்பு மேற்பார்வை – கே.பாலகுமார்
மூலக்கதை தயாரிப்பு – P. குணசேகரன்

திரைக்கதை எழுதி இயகுகிறார் எஸ்.சிவகுமார் .
படம் பற்றி இயக்குனர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டோம்….
இது ஒரு திரிலர் கதை ! மருத்துவ கல்லுரி ஒன்றில் நடக்கும் கதை!
மருத்துவ கல்லுரி ஒன்றில் படிக்கும் மாணவன் ஒருவனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம் அவனை கோபமுள்ள முரடனாக்குகிறது அவன் பழிவாங்க துடிக்கிறான்.
அவன் யாரை எதற்காக பழிவாங்க துடிக்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதை அமைப்பின் மூலம் உணரலாம். படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னை, கொடைக்கானல் போன்ற இடங்களில் நடை பெற்றிருக்கிறது. படம் விரைவில் திரைக்கு வருகிறது என்றார் இயக்குனர் எஸ்.சிவகுமார்.
இந்த படத்தை தயாரிக்கும் ஜி.எஸ் டெவலப்பர் பட நிறுவனம் மற்றும் ஒரு படத்தை தயாரிக்க உள்ளது அதற்கான நடிகர்,நடிகைகள்,தொழிற்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருகிறது.

Previous articleVingyani Movie news
Next articleMegha Press Meet Stills

Related Articles

Stay Connected

22,043FansLike
3,874FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE