ஆந்திராவில் ஒரு வீட்டில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கிய ஐஸ்க்ரீம் படம் தான் தமிழில் ‘சாக்கோபார்’ ஆக டப் ஆகியிருக்கிறது.
வெறும் ரெண்டேகால் லட்சத்தில் எடுக்கப்பட்ட இந்தப்படம் சுமார் 40 கோடி ரூபாய்க்கும் மேல் அங்கு வசூல் செய்ததாம்.
சரி கதைக்கு வருவோம்…
ஸ்டடிக்காக தனக்கு சொந்தமான பங்களா ஒன்றுக்கு காதலன் நவ்தீப் உடன் வருகிறார் தேஜஸ்வி. வந்தவர் அவர் மட்டுமே அந்த பங்களாவில் தைரியமாக தங்குகிறார்.
மிக அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டிருந்த அந்த பிரம்மாண்ட பங்களாவுக்கு இருட்டு பகல் என்றெல்லாம் இல்லை. எந்த நேரமும் ஏதாவது அமானுஷ்ய நிகழ்வுகள் நடக்கிறது.
இதனால் பல இரவுகள் தூக்கத்தையும் தொலைத்து, பல பகல்கள் நிம்மதியையும் தொலைக்கிற தேஜஸ்வி அங்கு நடப்பது என்ன என்பதே தெரியாமல் குழம்பிப் போகிறார்.
கிளைமாக்ஸில் எல்லா செயல்களுக்கும் அவரே காரணம் என்பதாக முடிகிறது படம்!
ஒரு நாயகன், ஒரு நாயகி, வேலைக்காரப் பெண்மணி, அவளுடைய மகன், ஒரு ப்ளம்பர், ஒரு பீட்ஸா விற்க வருபவர், ஒரு கிளவி என ஆகக்குறைந்த எண்ணிக்கையிலான கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு திகில் கூட்டை ஒரே ஒரு வீட்டுக்குள் கட்டியிருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.
இந்த மாதிரியான திகில் படங்களெல்லாம் அவருக்கு கை வந்த கலை தான். ஆனால் நாயகியை திகில் படத்தில் முடிந்த வரை ஆடைகளை அவிழ்க்க வைத்து ரசிகர்களை ரசிக்க வைப்பதிலும் ஒரு புத்திசாலித்தனம் தெரிகிறது.
ஹீரோவாக வரும் நவ்தீப்புக்கு அவ்வளவாக படத்தில் வேலையில்லை என்றாலும் கிளைமாக்ஸில் பரிதாபத்தை அள்ளிக்கொள்கிறார்.
நாயகியாக வரும் சந்தனக்கட்டை தேஜஸ்வி தான் படத்தின் தொண்ணூறு சதவீதக் காட்சிகளை ஆக்ரமித்திருக்கிறார்.
உள்ளாடைகளை அசால்ட்டாக அவிழ்ப்பது முதல் மாடிக்கும் வராண்டாவுக்கும் நடையாய் நடக்கிற போது அவருடைய முன்னழகும், பின்னழகும் திரையில் ரசிகர்களை கிறங்கடிப்பது நிச்சயம்.
ராம்கோபால்வர்மா தேஜஸ்வியை இயக்கியதை விட படத்தின் ஒளிப்பதிவாளர் அஞ்சி தான் முழுமையாக கையாண்டியிருக்கிறார். தேஜஸ்வியை ஓட விட்டு, நடக்க விட்டு, படுக்க விட்டு, குளிக்க விட்டு இப்படி பல ஆங்கிள்களில் ரகளையான கோணங்களில் ஒளிப்பதிவு செய்து ரசிகர்களின் ஏக்கத்தை போக்குகிறார்.
வேலைக்காரியாக வரும் சந்தீப்தி அளவாகப் பேசினாலும் அவர் கண்கள் ஆயிரம் வாட்ஸ் நடிப்பை அப்படியே வெளிப்படுத்துகிறது.
எத்தனை மார்க் போட்டாலும் அத்தனையும் ஆடை அவிழ்ப்பில் அலட்சியம் காட்டாத நாயகி தேஜஸ்விக்குத்தான் போய்ச்சேரும்.
பொதுவாகவே தன்னுடைய படங்களின் நாயகிகளை ரசிகர்கள் தூக்கத்தை தொலைக்கிற விதமாகத்தான் தேர்ந்தெடுத்து நடிக்க வைப்பார் ராம்கோபால்வர்மா.
இதில் ஒருபடி மேலே போய் அதே லெவல் செலக்ஷனோடு கவர்ச்சியையும் வாரி இறைக்க வைத்திருக்கிறார்.