-7.1 C
New York
Thursday, January 23, 2025

Buy now

spot_img

சரியான படத்திற்காக காத்திருக்கிறேன் – சானியாதாரா

அழகு, திறமை இருந்தாலும் சினிமாவில் ஒரு பிரேக் கிடைக்க வேண்டும் என்பார்கள். அப்படி ஒரு பிரேக் வேண்டும் என்று ஒரு திருப்பு முனையான படத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை சானியாதாரா.

இவர் சுந்தரத் தெலுங்கு தேசத்திலிருந்து தமிழ்த்தேசம் வந்திருப்பவர். பிறந்தது ஹைதராபாத் என்றாலும் தமிழ் நன்றாகப் பேசுகிறார் இவருக்கு நல்ல திருப்பு முனை அமையாத காரணம், இவர் தமிழ் பேசக் கற்றுக் கொண்டது கூட காரணமாக இருக்குமோ?

இவரிடம் நடிப்பாற்றல், நடனத் திறமை, அழகான தோற்றம், அணுக எளிமை அனைத்தும் இருக்கின்றன.குறையொன்றுமில்லைதான். கையில் சில படங்கள் இருக்கின்றன.ஆனாலும் நல்லதொரு திருப்பு முனைக்குக் காத்திருக்கிறார்.

யாரிந்த சானியா தாரா ?
2015-ல் வெளியான ‘ஜிகினா’ படத்தின் நாயகி, ‘வாராயோ வெண்ணிலாவே’ படத்தில் குட்டி கவிதையாக சின்ன பாத்திரத்திலும் கவர்ந்தவர். சுசீந்திரன் இயக்கிய ஜீவாவில்
​ இன்னொரு நாயகியாக​
​ நடித்திருக்கிறார்.

இயற்பெயர் சானியா ஷேக், பிடித்த நடிகை நயன்தாரா என்பதாலோ என்னவோ எண் கணிதப்படி பெயரும் சானியாதாரா என்று அமைந்து விட்டது.

சிறுவயதிலேயே சினிமா ஆர்வம். நடனம் கற்றார். சிலவிளம்பரப் படங்களில் நடித்தவருக்கு சினிமா வாய்ப்பு வரவே
​ சினிமாப் பக்கம் வந்து விட்டார்.

சானியாதாராவுக்கு என்னென்ன பிடிக்கும்?

”நடிகர்களில் சூர்யா நடிகைகளில் ஜோதிகா பிடிக்கும். இந்தியில் ஹிருத்திக், ஐஸ்வர்யாராய்,பிடிக்கும்.

இயக்குநர்களில் ராஜமௌலி, மணிரத்னம், ஷங்கர் என்
​ஃ​பேவரைட். டிவி
​ ​பார்ப்பது நடனம் ஆடுவது மட்டும் அல்ல எனக்குச் சமைக்கவும் பிடிக்கும்.” என்கிற இவர் ஒரு சிக்கன் பிரியையாம்.

சிக்கன் உணவு வகை என்று வந்து விட்டால் சிக்கனம் காட்ட மாட்டாராம். ஒரு பிடி பிடிப்பாராம். அது மட்டுமல்ல சிக்கன் அயிட்டங்களைச் சமைத்தும்கூட அசத்துவாராம்.

சானியாவுக்கு எப்படிப்பட்ட படங்கள் பிடிக்கும்?

” பேய்ப்படங்கள் திகிலூட்டும் திரில்லர் படங்கள் எனக்கு பிடிக்கும். ‘சந்திரமுகி’ ஜோதிகா என்னை கலங்க வைத்தவர்” என்கிறார்.

‘சானியாதாரா’ என்கிற பெயரில் இவருக்குப் பிடித்த நயன்தாரா பெயர் இருப்பதில் மகிழ்கிறார். தான் நய
​ன்​தாராவில் பாதி என்று இந்த வகையிலாவது மகிழ முடியும் அல்லவா?

அழகு, திறமை இருந்தாலும் சானியாவுக்கு ஏன் சரியான படம் வரவில்லை?

” எல்லாவற்றுக்கும் ஒரு நேரம் வரவேண்டும் அது வந்துவி
​ட்​டால் தடுத்தாலும் நிற்காது. வருகிற ஏனோதானோ படங்களில் நடிக்கலாம், வருஷம் முழுக்க படப்பிடிப்பு போகலாம். அதில் எனக்கு விருப்பமில்லை.
​ அவசரமில்லை; சரியான படத்திற்காக காத்திருக்கிறேன்
​.​

இந்த’ சானியா ‘வின் திறமைக்குத் ‘தீனியா’ வரும் வாய்ப்புக்காக நல்ல பிரேக்கிற்காக காத்திருக்கிறேன்”. என்கிறார் நம்பிக்கையுடன்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE