சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் உள்ள சத்தியபாமா பல்கலைகழகத்தில் மாணவர்கள் கண்டுபிடித்த செயற்க்கைகோள் இஸ்ரோ திட்ட இயக்குநர் பிரபாகரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சிபல் கலைகழக நிறுவனர் ஜேப்பியார் தலைமையில் பல்கலைகழக வளாகத்தில் நடைபெற்றது.
இந்திய வின்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் விஞ்ஞானிகளின் வழிகாட்டுதளின் கீழ் சத்தியபாமா செயற்க்கைகோளைஉறுவாக்கும் முயற்ச்சியை சத்தியபாமா பல்கலைகழக இறுதி ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இனணந்து 6 வருடகாலம் 6 மாதஉழைப்பில் செயற்க்கைகோளை உறுவாக்கியுள்ளனர். சத்தியபாமா மாணவர்கள் கண்டுபிடித்தசெயற்க்கைகோள் வின்வெளி ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் மாசு கண்காணிப்புக்காக உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் விமான உதிரிபாகங்களின் துணையோடு உருவாக்கப்பட்ட இந்த சத்தியபாமா செயற்க்கைகோள் இந்திய தொழில்நுட்பத்தின் ஒருமுழுமையான படைப்பாகும். பூமியின் ஒருகுறிப்பிட்ட சுற்று வட்டபாதையில் பயணிக்கபோகும் இந்தசெயற்க்கைகோள் 1.5 கிலோமீட்டர்க்கு துல்லியமாக தகவலை கொடுக்கும் திறன் கொண்டது.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்ரோதிட்ட இயக்குநர் பிரபாகர் பேசுகையில்: மாணவர்கள் உருவாக்கிய இந்தசெயற்க்கை;கோள் முதற் கட்ட சோதனையில் வெற்றிபெற்றுள்ளதாகவும்,அடுத்தக்கட்டசோதனைக்காக பெங்களுர்க்கு கொண்டுபோய் சோதனை மேற்கொண்ட பின்னர் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவிற்கு எடுத்துச்சென்றுவரும் ஜீன் மாதம் வின்னிள் ஏவப்படும் என்றும் தெரிவித்தார்.
உடன் பல்கலைகழக இயக்குநர்கள் மரிய ஜான்சன்,மரியஜீனா ஜான்சன் கலந்துகொண்டனர்.