15.3 C
New York
Thursday, December 12, 2024

Buy now

spot_img

சக்திவேல் வாசு, கணேஷ் வெங்கட் ராம் இணைந்து நடிக்கவிருக்கும் படத்தின் பூஜை இன்று தொடக்கம்

7 நாட்கள் திரைப்படத்தின் பூஜை , ஆரம்ப விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் பிரபல இயக்குநர் பி.வாசு , நடிகர்கள் சக்திவேல் வாசு , கணேஷ் வெங்கட் ராம் , நடிகை நிகிஷா படேல் , அங்கனா ராய் , எம். எஸ். பாஸ்கர் , படத்தின் இயக்குநர் கௌதம் ,ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு , தயாரிப்பாளர் கார்த்திக் மற்றும் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இயக்குநர் பி.வாசு பேசியது , 7 நாட்கள் திரைப்படத்தின் கதை மிக சிறந்த கதையாகும் , இப்படத்தின் இயக்குநர் கௌவுதம் தயாரிப்பாளர் Trendக்கு ஏற்றவாறு படம் இயக்க வேண்டும். இன்றைய இளைஞர்கள் குறும்படங்களை இயக்கிவிட்டு அதை தங்கள் திறமைக்கு சான்றாக எடுத்து கொண்டு வருகின்றனர். ஆனால் எங்கள் காலத்தில் அப்படி ஒரு சூழல் இருந்தது இல்லை. இயக்குநர் ஸ்ரீதர் அவர்களுடன் உதவி இயக்குநராக வேலை செய்யும் போது அவர் என்னை பெயரை சொல்லி கூப்பிடுவதே அரிதான ஒரு விஷயமாக இருந்தது. நான் இப்போது சக்திவேல் நடிக்கும் படத்தின் கதைகளை கேட்பது இல்லை. ஆனால் அவரை வைத்து படம் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை பற்றி மட்டும் நான் தெரிந்து கொள்வது உண்டு.

நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பேசியது ; நானும் திரைக்கதை ஆசிரியர் விமலும் பள்ளி படிக்கும் காலத்தில் இருந்து நண்பர்கள். அவருடைய மகனின் இயக்கத்தில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அபியும் நானும் படத்திலேயே கணேஷ் வெங்கட்ராமனுடன் நான் பணியாற்றி இருக்கிறேன். ஆனால் இப்படத்தில் தான் அவருடன் இனைந்து நடிக்கும் வாய்ப்பு எனக்கு அமைந்துள்ளது.

ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு பேசியது ; இயக்குநர் எப்போதும் ஒளிப்பதிவாளர்கள் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும். ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றும் போது அருமையான படைப்பாக ஒரு திரைப்படமும் வெளிவரும். இப்படத்தின் இயக்குநர் கௌதமும் ஒளிப்பதிவாளருடன் இணைந்து பணியாற்றும் ஒரு நபர் தான்.

இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் பேசியது ; எனக்கு எப்போதும் நல்ல கதைகளில் பணியாற்றுவது தான் பிடிக்கும் , அந்த வகையில் இது மிக சிறந்த கதை எனலாம். பிரபு சாரின் பிரேமுக்கு இசையமைக்க ஆவலோடு இருக்கிறேன் என்றார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE