15.1 C
New York
Thursday, April 24, 2025

Buy now

spot_img

கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல , ஒரு நல்ல இயக்குனராக எனக்கு தெரிகிறார் ” மா ” விழாவில் இயக்குனர் பாண்டிராஜ் பேச்சு

‘ஜி மைம் ஸ்டுடியோ’ என்ற நிறுவனத்தின் மூலம், மைம் கலையை வளரும் இளைய தலைமுறையினரிடம் வெற்றிக்கரமாக கொண்டு சென்றுள்ள மைம் கோபி, சினிமாவுக்கான நடிப்பி பயிற்சியை கற்பித்து வருவதுடன், பல படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து வருபவர் .

வருடா வருடம் தனது "மைம்" கலையின் மூலமாக நடத்தும் நிகழ்ச்சி மூலம் ஆதரவற்றவர்களுக்கு பல உதவிகள் செய்து வருகிறார் . இந்த வருடம் HIV யினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக நிகழ்ச்சி நடத்தப்பட்டது . சென்னை காமராஜர் அரங்கத்தில் 14 .மே மாலை 6 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்கள் சினிமாத்துறை பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சியில் மைம் கலையில் இசைக்கருவிகளை வாசிப்பது போன்ற நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது . அம்மா வின் அருமை பற்றி மைம் கோபி குழுவினர் நடித்துக்காட்டியது பார்வையாளர்களை கண் கலங்க வைத்தது ..
விழாவுக்கு வந்திருந்த அனைவரும் எழுந்து நின்று கை தட்டினர் .

விழாவில் பேசிய இயக்குனர் பாண்டிராஜ் ..... மைம் கோபி நடத்தும் இந்த விழா மதிக்கத்தக்க ஒரு நிகழசசி ...தனக்கு கிடைக்கும் சினிமா புகழ் மூலமாக இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தி , நல்ல காரியங்களுக்காக தொடர்ந்து அவர் செய்து வரும் சேவைகளை நான் பாராட்டுகிறேன் .
சினிமாவில் பிரபலமாக இருக்கும் பலரும் இது போன்ற நல்ல காரியங்களுக்கு உதவ வேண்டும் , நானும் எனது பங்களிப்பை தொடர்ந்து கொடுத்து வருவேன் .

நான் குழந்தைகளை வைத்து படம் எடுத்து இருக்கிறேன் . இந்த மேடையில் இத்தனை குழந்தைகளை ஒரே நேரத்தில் இவ்வளவு அருமையாக நடிக்க வைப்பது பெரும் சிரமம் . கோபி அருமையான ஒரு நடிகர் மட்டுமல்ல , ஒரு நல்ல இயக்குனராக எனக்கு தெரிகிறார் . தொடர்ந்து எனது ஆதரவு எப்போதும் மைம் கோபிக்கும் இந்த குழுவினருக்கும் உண்டு என்று பேசினார் .

விழாவில் நடிகர் கிஷோர் பேசும்போது ... கோபியை நான் பாராட்டுகிறேன் , பிரமாதமான ஒரு நிகழ்ச்சி ,எனக்கும் மைம் குழுவில் சேர்ந்து இது போன்று நடிக்கவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது , அடுத்த வருடம் நான் இந்த கலையை கோபியுடன் கற்றுக்கொண்டு இதே மேடையில் நடிப்பேன் என்றார் .

விழாவில் இயக்குனர்கள் சுசீந்திரன் , கரு பழனியப்பன் ,மகிழ் திருமேனி ,பாலாஜி மோகன் ,சிவா , ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமணியன் , நடிகர்கள் காளி வெங்கட் ,சரவணன் , பாண்டி ,முரளி ,ஆத்மா ,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் .

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE