23.7 C
New York
Sunday, September 15, 2024

Buy now

spot_img

கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் தயாரிப்பில், பிரபல தயாரிப்பாளர் சீ.வி.குமார் இயக்கும் “மாயவன்”

புதிய தலைமுறை இயக்குனர்களை ஊக்குவித்து அவர்களை தனது தயாரிப்பு நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் மூலமாக அறிமுகபடுத்தி தமிழ் சினிமாவில் புதிய அத்தியாத்தை உருவாக்கியவர் தயாரிப்பாளர் சீ.வீ.குமார்.

வெற்றி தயாரிப்பாளராக தன்னை நிருபித்து காட்டிய சீ.வீ.குமார் தற்போது இயக்குனராக புதிய அவதாரமெடுத்துள்ளார். இவர் இயக்கும் படத்திற்கு "மாயவன்" என்று பெயரிடப்பட்டிருக்கிறது.

இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுந்திப் கிஷன் நாயகனாகவும், லாவன்யா திரிபத்தி நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் டெனியல் பாலாஜி நடிக்க, உடன் பகவதி பெருமாள் (பக்ஸ்), ஜெ பி, மைம் கோபி, பாபு ஆண்டனி ஆகியோர் நடிக்கின்றனர்.

அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஜனரஞ்சகமான முறையில் பிரம்மாண்டமாக இப்படம் எடுக்கபடவுள்ளது.

கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கீரின் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கின்றது. ஜிப்ரான் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவை மேற்கொள்கிறார். படத்தொகுப்பு லியோ ஜான் பால்.

இப்படத்தின் படபிடிப்பு சென்னையில் இன்று இனிதே துவங்கி தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE