-0.5 C
New York
Friday, December 6, 2024

Buy now

spot_img

குறும்பட தயாரிப்பில் ஈடுபடும் நடிகர் ஆரி

WOW CELEBRATION CEO முகமது இப்ராஹிம் நடத்திய IT STARS நிகழ்ச்சியில் பல்வேறு சாஃப்டுவேர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களை உற்சாக படுத்தவும் ,அவர்களின் மன அழுத்தத்தை குறைக்கவும் அந்த ஊழியர்களின் தனிதிறனை கண்டறிந்து அவர்களுக்கிடையே போட்டி நடத்தப்பட்டது.

அவர்களுள் ஆடல்,பாடல்,இசையமைத்தல் மற்றும் MIMICRY போட்டியில் சிறந்தவர்களுக்கான இறுதி போட்டி இன்று தரமணியில் உள்ள ASIANA PLACE-ல் நடை பெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஆரி மற்றும் ஹேமா ருக்மணி (தேனாண்டாள் என்டேர்டைன்மெண்ட் ​)​, அப்துல் கனி​ ​சமூக ஆர்வலர், ஹேம் சந்தர் மற்றும் உமா ஷங்கர் , நடுவர்களாக சதிஷ் மற்றும் நாசர் அலியும் ஆகியோர் கலந்து கொண்டனர், இதில் கலந்து கொண்ட அனைத்து SOFTWARE ஊழியர்களும் இதில் கலந்து கொண்டது மகிச்சியாக இருப்பதாகவும், உண்மையில் இது போன்ற நிகழ்ச்சிகளால் IT நிறுவன ஊழியர்களின் தற்கொலை போன்ற சம்பவங்கள் குறையும் என்றும் கூறி பெருமை கொண்டனர்.

குறிப்பாக இதில் நடிகர் ஆரி ஆரிமுகம் (AARI MUGAM ) என்ற நிறுவனத்தை அறிமுகப்படுத்தினார் ஆரி முகம் நிறுவனத்தில் நானும் முகமது இப்ராஹிம் மற்றும் ஷாநவாஸ் அவர்களும் செயல் படவுள்ளோம் எனத்தெரிவித்த ஆரி குறும்படம் எடுக்கும் இளைஞர்களை ஊக்க படுத்தவும் அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவும் வழி செய்யப்போவதாக கூறினார்.இதில் சிறந்த குறும்பட இயக்குனருக்கு தான் ஆரி முகம் நிறுவனத்தின் மூலம் படம் தயாரிக்க உதவுவதாகவும் கூறினார்.

Related Articles

Stay Connected

22,043FansLike
3,912FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles

CLOSE
CLOSE