கமல் படத்தில் சித்ரா லட்சுமணன்
கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ வாக உத்தம வில்லன் திரைப்படத்தில் நடிக்கிறார்
சித்ரா லட்சுமணன். கமல்ஹாசனின் நெருங்கிய நண்பரான இவர் ஆரம்ப நாட்களில்
கமல்ஹாசனுக்கு பி.ஆர்.ஓ வாக பணியாற்றியவர். பின்னர் கமல்ஹாசன் நடிக்க
சூரசம்ஹாரம் என்ற திரைப்படத்தை எழுதி இயக்கி தயாரித்த இவர் உத்தம வில்லன்
திரைப்படத்தில் கமல்ஹாசனின் பி.ஆர்.ஓ வாக நடிக்கிறார்.
கமல்ஹாசன் பூஜா குமார் ஆண்டிரியா இயக்குனர் கே விஸ்வநாத், கே பாலசந்தர்
ஆகியோரோடு இவர் நடித்த காட்சிகள் சமீபத்தில் சென்னையில் படமாக்கப்பட்டன.
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் அரண்மனை திரைப்படத்தில் அரண்மனைக்கு
சொந்தக்காரராக ஒரு முக்கியமான வேடத்தில் நடித்திருக்கும் இவர், ஜெகதீஷ்
இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் – நயன்தாரா இணைந்து நடிக்கும் நண்பேண்டா
படத்தில் சந்தானம் பணியாற்றும் ஓட்டலின் முதலாளியாக நடித்துள்ளார்
சேது – சந்தானம் நடிக்க சாய் கோகுல் ராம்னாத் இயக்கும் வாலிப ராஜா
திரைப்படத்தில் சேதுவின் தந்தையாக நடிக்கும் இவர் அப் படத்தில் ஏற்றுள்ள
பாத்திரத்தின் பெயரும் சித்ரா